பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

37


2. போட்டியில் பங்கு பெறுவதற்கான விதிகள்
(விதி - 141)

1. பதிவுகள்
(Entries)

1. தனித் திறன் நிகழ்ச்சிகளான ஓடுகளப் போட்டிகளுக்கான விதிமுறைகள் யாவும் வணிக முறையில் ஈடுபடாத, உடல் திறம் காட்டும் பொழுது போக்கு போட்டியாளர்களுக்குரியனவாகும். அவர்கள், அகில உலக அமெச்சூர் கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே போட்டிகளில் பங்கு பெற வேண்டும்.

2. அந்தந்த நாட்டுத் தேசிய அமெச்சூள் அதெலடிக் கழகம் அங்கீகாரத்துடன் அனுமதி அளித்திருந்தாலன்றி, எந்த வீரரும் அல்லது வீராங்கனையும் வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியிட முடியாது. அத்தகைய அங்கீகாரம் பெற்றிருக்கும் வரையில் தான், அவர்களும், அகில உலகப் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படுகின்றார்கள். ஏதாவது இதில் ஐயப்பாடு எழுமாயின் அந்தந்தத் தேசிய கழகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, பரீசீலித்து முடிவெடுக்கப்படும்.