பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


பெண்கள் போட்டியிடுவதற்குரிய விதிகள்

3. பெண்கள் போட்டிக்காகப் பெயர்தரும் பொழுது, 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை, போட்டிகளை நடத்துவோர் அமைத்திடவேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் பெயர் பதிவுசெய்து கொள்வதற்காக விண்ணப்பிக்கும் பொழுது தனக்குரிய மருத்துவச் சான்றிதழையும் அத்துடன் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாத பொழுது, மருத்துவச் சான்றிதழின் போட்டோ பிரதியையாவது அத்துடன் இணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போட்டி நடத்துவர் அமைந்திருக்கின்ற மருத்துவக் குழுவினர் முன்பாக பரிசோதனைக்கு வந்தாக வேண்டும்.

4. மருத்துவக் குழுவினர் முன் தோன்றி பரிசோதனைக்கு உட்பட்ட வீராங்கனை, போட்டியிடுவதற்கு அருகதையுள்ளவர் என்று அங்கீகரித்த பிறகு, அந்தச் சேத யை அகசில உலக அமெச்சூர் கழக தலைமையிடத்திற்கு, அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, அனுமதிக்கப்பட்ட விஷயத்தையும் தெளிவாக எழுதி அனுப்பிடல் வேண்டும். அந்த அனுமதியை அங்குள்ள பொதுப் பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.

அந்தந்த நாட்டு தேசியக் கழகம், தேவை என்று விண்ணப்பித்தால், அந்த வீராங்கனையின் ஒப்புதல் அளித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.