பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


4. முதல் கட்டத்தேர்வுப் போட்டிகள்
தகுதிப்போட்டிகள்
(ROUNDS, HEATS AND QUALIFYING
COMPETITIONS)
(விதி - 143)

ஒட்டப் போட்டிகளி : (Track Events) 1. ஒட்டப் போட்டிகளில் பங்கு பெறும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்பொழுது, அந்த எண்ணிக்கையைக் குறைத்து, திருப்திகரமான இறுதிப் போட்டிக்குப் போதுமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தான் முதற்கட்டத் தேர்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

2. முதற் கட்டப் போட்டிகளுக்கும் , தகுதிப்போட்டிகளுக்கும் போட்டியாளர்களை அந்தந்தப் போட்டிக்கென்று வரிசைப்படுத்தும்போது, போட்டிகளை நடத்துகின்ற குழுவானது, போட்டியிடுகின்ற அணிகளின் அங்கீகாரம் பெற்ற நுண்ணியல் சார்பாளர்களையும் (Delegates) அழைத்து, அவர்களுடன் ஒருங்கிணைந்து வரிசைப்படுத்திட (arrange) வேண்டும்.

3. ஒவ்வொரு நாட்டின் சார்பாக பிரதிநிதித்துவம் பெற்று வருகிற போட்டியாளர்கள் பலரில், ஒரே நாட்டினர் ஒரே ஓடும் போட்டியில் (Heat) பங்கு பெறாத வண்ணம்,