பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


போட்டியில்தான் கலந்துகொண்டு ஓட வேண்டும். அதாவது எந்த தேள்வோட்டப் போட்டி வரிசையில் அவர் பெயர் இருக்கிறதோ, அந்த வரிசையில் தான் ஓட வேண்டும்.

அவர் வேறொரு தேர்வோட்டப் போட்டியில் ஓடவிரும்பினால், அந்த சூழ்நிலையை ஆராய்ந்த தலைமை நடுவர், அவள் இன்னொரு வரிசை முறை ஓட்டத்தில் ஒடலாம் என்று அபிப்ராயப்பட்டால், அந்த ஒட்டக்காரர் மாறி ஓடலாம்.

5. முதற்கட்ட, இரண்டாம் கட்டத் தேர்வோட்டப் போட்டிகளில், ஒடி வென்று, அடுத்தக் கட்டப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களை, தேர்வு செய்திடவேண்டும் என்பது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது,

வேறு ஏதாவது ஒரு ஒட்டக்காரரை அடுத்தக் கட்ட ஒட்டப் போட்டிக்கு தேர்வு செய்யவேண்டுமென்றால், அவர் ஓடி முடித்து வெற்றி பெற்ற இடத்தை (Placing) அல்லது அவள் ஓடி முடித்த நேரத்தை (Time) வைத்துத் தான் தீர்மானிக்க வேண்டும்.

யாரையாவது, ஒடிய நேரத்தை வைத்துக் கொண்டு தேர்ந்தெடுப்பதாக இருந்தால்; ஒவ்வொரு தேர்வோட்டப் போட்டியும் (Heat) எந்தெந்தவரிசை முறைப்படி ஓடுவது என்பதை சீட்டெடுப்பின் (draw) மூலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

6. முதல் கட்ட இரண்டாம் கட்ட தேர்வோட்டப் போட்டிக்கும் இறுதிப் போட்டிக்கும் அல்லது அடுத்தக் கட்டப்போட்டிக்கும் இடையில், ஒரு குறிப்பிட்ட ஒய்வு நேரம் இருந்தாக வேண்டும் என்பது அனுபவப் பூர்வமாக அறிந்து: கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.