பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திருந்த வேளையில், காலனியாட்சியாளருக்கு ஓர் எச்சரிக்கையாக நிகழ்த்திய கொலைதான் என்றும், அப்போது ஐரோப்பாவில் இருந்து வந்த எம்.பி. டி. ஆச்சாரியாவிட மிருந்து வந்த உத்தரவின் பேரிலேயே இது நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது.

நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தாவில் கைது செய்யப் பாட்டு, சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சென்னையில் 75 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின்னர், அவருக்கு ஏழாண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த காலத்தில் முதல் உலகப் போரும் வெடித்தது. அப்போது இந்தியாவிலிருந்த பல புரட்சி யாளர்களும் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான தருணம் வந்துவிட்டதாகவும், அதற்குத் தேவையான உதவி வெளிநாட்டிலிருந்து வந்து சேருமென்றும் நம்பினார்கள். இதேபோல் நம்பிய நீலகண்ட பிரம்மச்சாரி சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். என்றாலும் அவர் விரைவிலேயே பிடிபட்டார்; மேலும் ஆறு மாதச் சிறைத்தண்டனையோடு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதன்பின் அவர் தமது தண்டனைக் காலம் முழுவதும் முடிந்து 1919 ஆகஸ்டு மாதத்தில்தான் விடுதலையானார். விடுதலையாகி வெளிவந்ததும், அவர் மீண்டும் புரட்சிப் பணியில் முழு மூச்சோடு இறங்கினார். எனினும் பழைய முறையில் அல்ல. அக்டோபர் புரட்சி அவருக்கு அதற்கான வழியைக் காட்டியது. அவர் கம்யூனிஸ்டுக் கொள்கைகளின்பால் ஈடுபாடு கொண்டு, அவற்றைப் பரப்பவும் தொடங்கினார். இது விஷயத்தில், அவர் இந்த நாட்டில் கம்யூனிசத்தை முதன் முதலில் பிரசாரம் செய்தவர்களின் ஒருவராக விளங்கினார் என்று அவரது வரலாற்றை எழுதியுள்ள ரா. அ. பத்மனாபன் எழுதுகிறார். (The Revolutionary who has turned a Sadhu, Free India, 1972). இவரைக் குறித்து புதிய அலை பத்திரிகை ஆசிரியை டாக்டர் எஸ். விஜயலஷ்மி அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கும், தொழிற் சங்க

23