உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோரும் சமமென்பது
உறுதியாச்சு !
சங்கு கொண்டே வெற்றி
ஊதுவோமே! - இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்து
ஓதுவோமே!

 உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை செய்வோம்!
விழலுக்கு நீர்பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம்
ஓய மாட்டோம்!
ஆடுவோமே - பள்ளுப்
பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று

(ஆடுவோமே)

என்றாலும், அன்னிய ஆட்சியாளர்களையும் அவர்தம் காலனியாதிக்கச் சுரண்டற் கொள்ளையையும் சாடி எரிமலையெனக் குமுறி நெருப்பைக் கக்கி வந்த பாரதியின் இந்தியா பத்திரிகையின் மீது விரைவிலேயே, 1908 செப்டம்பர் மாதத்திலேயே, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கழுகுக்கண்கள் பாய்ந்து விட்டன. அரசாங்கம் தம்மைக் கைது செய்யப் போகிறது என்ற ரகசியத்தைத் தெரிந்து கொண்ட பாரதி, தமது சகாக்கள் சிலரோடு அந்நாளில் பிரெஞ்சு நாட்டின் ஆட்சியின் கீழிருந்த பாண்டிச்சேரிக்கு உடனே போய் விட்டார். இந்தியா வாரப் பத்திரிகையையும் அங்கிருந்து தொடர்ந்து வெளியிட்டு வரத் தொடங்கினார். இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும் : பாரதியோடு பாண்டிச்சேரி சென்ற அவரது சகாக்களில், இந்தியா

8