34
அசோகர் கதைகள்
இருந்தது. அவன் குடியானவரைப் பற்றி எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. உடன் வந்த பிராமணர்களெல்லாம் தூங்கி எழுத்தபின் அவர்களோடு புறப்பட்டுச் சென்றான். போகும்போது குடியானவரிடம் "போய் வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான்.
சரியாக ஓராண்டு கழிந்தது. புத்தாண்டு பிறந்தது. சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை வந்தது. மகாலிங்க சாஸ்திரி அன்று நண்பகல் நேரத்தில் அந்தக் கிராமத்துச் சத்திரத்துக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துக் கொண்டு அந்தக் குடியானவர் காத்திருந்தார்.
அவர் அருகில் சென்றவுடனேயே அவன் தானாகப் பேசத் தொடங்கினன். ஆனந்தத்தோடு "ஐயா, என் அண்ணனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது!" என்று கூறினான்.
"எப்படி?" என்று கேட்டார் குடியானவர்.
"என் தாய்க்கு மூத்த அண்ணன் மேல் பற்று அதிகமாயிருந்தது. என் தந்தைக்கு இரண்டாவது அண்ணன்மேல் பாசம் அதிகமாயிருந்தது. என் மூன்றாவது அண்ணனுக்கு யாருடைய அன்பும் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. நான் பிறந்த பின், தாய் தந்தை இருவருமே கடைசிப் பிள்ளையான என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினர்கள். அந்த நிலையில் என் மூன்றாவது அண்ணன் முற்றிலும் ஒதுக்கப்பட்டவணுகி விட்டான். அன்புக்காக ஏங்கி ஏங்கி அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.
"சென்ற ஆண்டு நான் என் தாயைப் பார்க்கப் போனபோது தங்கள் கருத்துப்படி அண்ணனை என்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னேன்.