பக்கம்:அசோகர் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அசோகர் கதைகள்

குடும்பமே புது வாழ்வு பெற்றுவிட்டது" என்று கூறினன் இளைஞன்.

"இனிச் சோதனை எதுவும் தேவையில்லை. அசோகர் எழுத்துப் பொருள் பெற்றுவிட்டதல்லவா?" என்று கூறிச் சிரித்தார் குடியானவர்.

"ஐயா, அசோகரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றான் இளைஞன்.

"அசோகரை யாரும் எளிதாகப் பார்க்கலாம். தலைநகருக்குப் போனால் அரண்மனையில் அவரைப் பேட்டி காணலாம். சாதாரண குடியானவனை என்னிடம் பேசுவது போலவே அவரிடம் எந்தப் பிரச்சினை பற்றியும் பேசலாம்" என்று கூறினர் குடியானவர்.

மகாலிங்க சாஸ்திரி அன்றே தலைநகருக்குப் புறப்பட்டான். அதற்கு வேண்டிய ஆயத்தங்களோடுதான் அவன் ராஜகிரியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.

அரண்மனையில் மாமன்னரைப் பார்க்க அவனுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது. மணி மண்டபத்தில் அரசர் வருகைக்காகக் காத்திருந்த பலரோடு அவனும் காத்திருங்தான். கணீர் என்ற மணியோசையைத் தொடர்ந்து எழுந்த வீணையின் மெல்லிய நாதத்துடன் அரசர் மண்டபத்தினுள் நுழைந்தார். அரியணையில் அவர் அமர்ந்தபின் எல்லோரும் எழுந்து வணங்கி நின்றனர்.

மகாலிங்க சாஸ்திரி மாமன்னரைக் காண விரும்புவதாக அரண்மனை அதிகாரி கூறினார். இளைஞன் எழுந்து நின்றான். அவன் வாய் திறக்குமுன் அசோகரே பேசினார்:

"அமைச்சர்களே, மகாலிங்க சாஸ்திரியை நான் நன்கு அறிவேன், அவர் இளைஞராயினும், பெரிய பண்டிதர்,