பக்கம்:அசோகர் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோகர் கதைகள்
கதை மூன்று

அன்பு வளர்க்கும் அண்ணல்

ந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன; ஒரே இருட்டு மயமாகத் தோன்றும்படி செய்தன. . அந்தகாரம் நிறைந்த அந்தக் காட்டிலே, அதன் தன்மைக்கு ஏற்பவே பல கொடிய மிருகங்கள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டுப் பாதையில் கொள்ளைக்காரர்கள் கூடப் போகப் பயப்படுவார்கள். அவர்கள் அங்கே போகவேண்டிய வேலையே இல்லை. யாராவது மக்கள் போகும் இடமாக இருந்தால்தானே அவர்களுக்கு அங்கே வேலையிருக்கும்!

இதற்காக அந்தக் காட்டை மனித நடமாட்டமே இல்லாத காடு என்று ஒதுக்கிவிட முடியாது. அங்கே மனித நடமாட்டமும் இருக்கத்தான் செய்தது. எப்படி