பக்கம்:அசோகர் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அசோகர் கதைகள்

அசோகர் புதிதாகப் போருக்கு எழுந்ததில்லை; அவருடைய முன்னேர்கள் வீரப் போரிட்டுச் சேர்த்த நாடுகளை அவர் சிதறிப்போகாமல் திறமையாகத் தம் நேரிய ஆட் சியில் பிணைத்து வைத்திருந்தார்.

காசியும் அவரால் வெல்லப்பட்டதல்ல. ஈசுவர நாதனுடைய பாட்டன் இறந்தபின், அசோகர் அவனுடைய தங்தையைத் தம் சிற்றரசராக ஏற்றுக்கொண்டு, தம் அரசப் பிரதிநிதியாக அதிகாரம் கொடுத்துக் காசி நாட்டின் ஆட்சியை அவர் கையில் ஒப்படைத்திருந்தார். ஈசுவரநாதனின் தந்தையும் அசோகரிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆனால் ஈசுவரநாதன் விவகாரம் அப்படிப்பட்டதல்ல.

அரச பரம்பரையிலே பிறந்த ஈசுவரகாதன் தீவிரமான சுதந்திர உணர்ச்சியுள்ளவன். அத்தோடு அவனது இளமைப் பருவம் அவனுக்குச் சுதந்திர ஆவேசத்தையே ஊட்டியிருக்தது என்று சொல்லவேண்டும். அவன் மனத்துக்குள்ளேயே தன் தந்தையின் போக்கை வெறுத்தான்.

தன் பாட்டன்தான் போரிலே தோற்றான் என்றால், தக்தை ஏன் தன் ஆண்மையைக் காத்துக்கொண்டிருக்கக் கூடாது? ஏன், தன் நாட்டைப் போரிட்டு மீட்டுக்கொண்டிருக்கக்கூடாது?-என்று அவன் மனத்திற்குள்ளேயே துடிப்பான். தன் காலத்திலாவது மவுரியர்களின் ஆட்சியினின்றும் காசியை மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்திற்குள்ளே கருவாகி உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.

காசி இளவரசன் ஈசுவரதாதன் தன் தோள்வலியைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், அரசியல் முறைகளையும்,