பக்கம்:அசோகர் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

43

இராஜதந்திரக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காகவும் தீவிரமாக முயன்றுவந்தான். அவனுடைய ஆர்வத்தையும் வேட்கையையும் கண்ட அவனுடைய தந்தை அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுத்துப் பாதி அரசாங்க வேலைகளை அவனைக்கொண்டே முடித்துக் கொண்டார்.

அரசாங்க வேலைகள் இல்லாத ஓய்வுநேரத்திலே ஈசுவர நாதனையும் அவனுடைய தோழர்களையும் வேட்டைக் காட்டிலேதான் பார்க்கலாம்.

அன்று ஒரு நாள் வழக்கம்போல வேட்டைக் காட்டுக்கு ஈசுவரனாதனும் தோழர்களும் சென்றிருந்தனர். வழக்கத் திற்கு மாருக அன்று ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்தது.

ஈசுவரகாதனுக்கு நேர் எதிராக ஒரு சிங்கம் வந்து விட்டது.

கூட வந்த தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்கள். இளவரசனை விட்டு விட்டு ஓடுவதா? அப்படியே ஒடுவதென்றாலும் அதற்குக் கூட அச்சத்தால் அவர்கள் கால்கள் நகரவில்லை. ஈசுவர நாதனும் சிங்கமும் நேருக்கு நேரே நின்றார்கள்.

அந்தச் சிங்கம் மிகுந்த பசியோடு இரை தேடிக் கொண்டு புறப்பட்டு வந்திருந்ததுபோலும். வாலைத் தூக்கிக் கொண்டு, எதிரே நின்ற ஈசுவரநாதனை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஈசுவரநாதன் இமை கொடிக்கும் நேரத் திற்குள்ளாக எதிர்த்துப் போரிட ஆயத்தமாகிவிட்டான். வாளை உருவிக் கொண்டு சிங்கத்தை எதிர்த்துத் தாக்கி