பக்கம்:அசோகர் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

49

எந்த இளைஞன் உள்ளம்தான் எக்களிப்படையாமல் இருக்கும்!

புத்த சங்கம் அமைக்கவந்த அசோகர் தன் வீரச் செயலை எவ்வாறு அறிந்தார்! அரண்மனையில் இருப்பவர்க்கே சற்று முன் தான் அச்செய்தி தெரிந்தது. அது நிகழ்ந்து இரண்டு நாழிகைப் பொழுதுகூட ஆகியிருக்காது. அதற்குள் அசோகருக்கு எப்படித் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.

விருந்து ஆயத்தமாகிவிட்டதாகப் பணிப்பெண்கள் வந்து கூறினர். உடனே காசி மன்னர் யாவரையும் விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

விருந்துண்ணும்போது அசோகரின் அருகில் காசி மன்னரும் ஈசுவரகாசனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இருபுறத்திலும் வரிசையாகப் புத்த பிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள்.

விருந்து மிகச் சிறப்பாகவே தயாராகி யிருந்தது. அரண்மனைச் சமையற்காரர்கள் மிகுந்த கவனத்தோடும் திறமையோடும் உணவுவகைகளைப் பாகம் பண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த விருந்து ஈசுவரநாதனுக்கு ஏமாற்றமளித்துவிட்டது. அவன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் கறி அன்று விருந்தில் பரிமாறப்படவில்லை.

புத்த பெருமான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். புத்த சங்கத்தில் சேர்ந்தவர்கள் கொல்லாமை நோன்பைக் கட்டாயமாகக் கடைப்