பக்கம்:அசோகர் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

59

கண்டபோது வியப்பாக இருந்தது, அந்த உயிர்களுக்கும் மனிதர்களுக்கிருப்பதைப் போலவே அன்புணர்வும் உறவு மனப்பான்மையும் இருக்கின்றன என்பதை அவன் நேரில் கண்டு கொண்டான்.

தான் வந்தது எதற்கென்று அவனுக்கு நினைவு வரச் சிறிது நேரம் பிடித்தது. அது நினைவு வந்தவுடன் அவன் தடதடவென்று கடந்து அசோகரை நெருங்கினான். அவன் நெருங்கிச் செல்லும்போது புறாக்கள் படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மேலெழும்பின. மான் கன்றுகள் துள்ளிப் பாய்ந்து ஓடின. அவன் அசோகரின் எதிரில் போய் கின்றவுடன் அவை மீண்டும் அங்கே வந்து சூழ்ந்து கொண்டன. தன்னையும் அவை தம் அன்புலகில் ஏற்றுக் கொண்டு விட்டன போலும் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் ஈசுவரநாதன்.

அசோகர் அவனே நோக்கி நிமிர்ந்தார். தான் வந்த காரணத்தைச் சில சொற்களில் அவன் விளக்கிக் கூறினான்.

"உடனடியாகக் கவனிக்க வேண்டியதுதான்" என்று கூறிக் கொண்டே அசோகர் எழுந்திருந்தார். ஆனால், அவர் இச் செய்தியைக் கேட்டுப் பரபரபபோ கலவரமோ அடைந்ததாகத் தெரியவில்லை.

அலுவல்மனைக்கு வந்தவுடன், சிற்றரசனின் ஒலையை வாங்கிப் பார்த்தார் அசோகர். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி அவனுக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு ஈசுவரகாதனிடம் கூறினர். தூதர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணவமும் அசட்டுத் தைரியமும் தொண்ட அந்தச் சிற்றரசன் அசோகரை வந்து காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/61&oldid=734185" இலிருந்து மீள்விக்கப்பட்டது