பக்கம்:அஞ்சலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 101

“இப்போ யார் இல்லேன்னாங்க?”

“நீ...”

“என்னையா?” எனும் வினாவில் அவன் கை மாரைத் தொட்டுக்கொண்டது.

“நீ இனிமே சும்மா சந்தைலிருந்து புடிச்சு ஓடிவந்த மாடாட்டம் வீட்ட விட்டு ஒடி ஒடிப்போவாதே; திரும்பி வரச்சே திருண்ணாமலைக்குப் போனேன், திருத்தணிக்குப் போனேன்னு விபூதி குங்குமம் கொண்ணாந்தாலும் நாங்க அதைத் தரிச்சாலும், சும்மா கோச்சிட்டு கோச்சிட்டுப் போவறத்துலே மதிப்புக் கொறைஞ்சு போவுது.”

“அப்புறம் குப்பனை நீ சும்மா கோவம் பண்ணாதே. இப்போ வயசுலே துள்ளுறான். அப்புறம் வயசுலே படிஞ்சு போவான்.”

“சரிம்மா—”

“ஆனால் காபாலி விசயமா— அவன் அவ்வளவு வெள்ளைன்னு சொல்லமாட்டேன். நீ அவன்கிட்டே எப்பவும் முளிப்பாயிருக்கணும். எல்லாம் உன் அண்ணன் இருக்கற வரைக்கும் சரியாயிருக்கும்; அப்புறம் அவன் பாகம் பிரிச்சுடுன்னா பாகம் கொடுத்துடு, உன்னுதே உனக்கு அப்போத்தான் மிஞ்சும்.”

அவள் மகன், மாலை வேளையில் மாரி கோவிலில் பலி பீடத்தண்டை தான் நிற்பதுபோல் கையைக் கூப்பிக்கொண்டு, ஆமோதனையில் தலையை ஆட்டினான்.

பூரணி தன் வயிற்றின்மேல் கோத்த கைகளைப் பார்த்துக்கொண்டாள்.

“காபாலியும் நான் பெத்த மவன்தான், ஆனால் இந்தப் பூமியிலே நாலுந்தான் விளையுது. நான் நட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/111&oldid=1024729" இலிருந்து மீள்விக்கப்பட்டது