பக்கம்:அஞ்சலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 லா. ச. ராமாமிருதம்

பலியாவது வாங்கிக்கிட்டு நிலைதிரும்பற நாளு நிலையில்லே. இது இப்படியிருந்தால், இந்தப் பூமிக்கு எப்படியிருக்கும்? இதுவும் ஒரு தேர்தானே!

“மாலையிலே போய் மாரியம்மன் கோவிலுக்கு விளக்கு வெப்பேன். மாடு கன்னு போட்டால் எல்லம்மனுக்கு பொங்கலிடுவேன். எனக்குத் தெரிஞ்சது அதுதான், எனக்கு நல்லா நினைப்பு இருக்குது. நான் கண்ணாலம் ஆகி இந்த வீட்டுள்ளே நுளைஞ்சு என் மாமியாரைக் காலுலே விழுந்து கும்பிட்டப்போ என்னா சொன்னாங்க தெரியுமா?”

“சின்னப் பொண்னே!” பூரணி சிரித்துக்கொண்டாள். “அவங்க என்னைச் சின்னப் பொண்ணுன்னுதான். கூப்பிடுவாங்க. ‘சின்னப் பொண்னே இந்த வீட்டுலே மூணு மறக்காதே.”

“எந்த ஊர் கொள்ளை போனாலும் உன் கையாலேயே வெள்ளி முளைக்கிற வேளைக்குத் தெருவாசல்லே சாணி தெளி. தண்ணி தெளிக்கறதை யாரும் பார்க்கக்கூடாது. அப்புறம் உலைக்குக் கொட்டறத்துக்கு முன்னே பானையைச் சுத்தி அடுப்புலே நாலு மணி அரிசி எறிஞ்சிட்டு உலையில கொட்டு. மாலையிலே தெருமாடத்துலே சாணி மேலே அகல் விளக்கு வைக்க மறவாதே.”

அவ்வளவுதான் என் மாமியார் எனக்குச் சொன்னாங்க. நான் இன்னிவரைக்கும் செய்து வரேன், இன்னிக்கு உனக்கு சொல்லிவிட்டேன்.

“அப்புறம் கழுத்துலே மாலையோடே கையிலே கொண்டைக்கிளியோடே, என்னைக் கையைப் பிடிச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/126&oldid=1025270" இலிருந்து மீள்விக்கப்பட்டது