பக்கம்:அஞ்சலி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 லா. ச. ராமாமிருதம்

பிறப்புக்குப் பிறப்புப் பிரிஞ்சு இருந்திருப்போம். மறுபடியும் கூடியிருப்போம். எப்படியும் நம்ம ஒத்தருக்கொத்தரு தெரிஞ்சவங்கதான். அதுலே சந்தேகமேயில்லே. ஒருசமயம் உனக்குப் புருசனாய் இருந்திருப்பேன். நீ எனக்குப் பெண்சாதியா—”

“ஐயா—இந்தப் பேச்ச என் புருசன் காதுலே விழுந்தா உன் எலும்பைப் பொறுக்கிடுவான். அவன் பூன்னு ஊதினா நீ நிக்கமாட்டே—”

“அவன் மொவத்துலே பயம் தெரியல்லே.”

“பூரணி நீ இந்த ஜன்மத்தை மாத்திரம் நினைக்கிறே. இந்த ஜென்மத்துல உனக்குப் புருசன் போன ஜென்மத்துலே என்னவோ அப்படித்தான் அவன். என் எலும்பைப் பொறுக்கட்டுமே. முழுவிப்போயிடுமா? அதனாலே இந்த மூவாயிரம் வருசத்தையும் இனிமே வரப்போற ஆறாயிரம் வருசத்தையும் அவனோ, நானோ, நீயோ, யாரோ அழிச்சு எழுத முடியுமா?”

“ஐயா ஒரு சமயம் நீ பேசறத்தைக் கேட்டா எனக்குச் சிரிப்புக்கூட வருது. நான் மூணு நாலு பெத்தாச்சு, இப்பவே நான் உனக்கு மூத்தவ. நான் கழவி, பழகிப் போனவ, பழசாப் போனவ. காலையிலே பூத்து மாலையிலே கட்டி, மாலைவரைக்கும் கொண்டையிலே வெச்சு, ஒவ்வொரு இதழா நாரிலேருந்து உதிந்து பாேறவ. இப்பொத்தான் கிள்ளின பூவாட்டம் நான் இன்னும் வாசனையடிக்க முடியுமா?”

“அவன் கண்ணுலே தண்ணி மாலை மாலையா ஒழுவுது பேச்சுத் தொண்டையை அடைக்குது. என்னை அணைக்கிறமாதிரி ரெண்டு கையை நீட்டிக்கிட்டு அந்தண்டைக் கரையிலே நிக்கறான்.

“பூரணி! உன் மணம் உனக்குத் தெரியல்லே. மூவாயிரம் வருசந் தாண்டி இப்பவும் என்னைத் தொடுதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/142&oldid=1025717" இருந்து மீள்விக்கப்பட்டது