பக்கம்:அஞ்சலி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 133

தெருவுலே போற மத்தவங்களைப் பாத்து இந்த எண்ணம் எனக்கு ஏற்படறதுதானே? இல்லியே! எல்லாருக்கும் இந்த விசேஷம் இருக்காது. சில பேர்தான்... அவங்க மொத மொதல் பொறந்த காரணத்தின் அடையாளத்தைக் கூடவே தாங்கிட்டு வராங்க. பூவும் அவங்கதான். நாறும் அவங்கதான். இரண்டுலேயும் வீசற வாசனையும் அவங்களே. பூவுலே பிறந்த வாசனையாயிருந்து அப்புறம் வாசனையிலே பூத்த பூவாயிடறாங்க. அம்மாதிரியிலே நீ ஒருத்தி. பூரணி! பூரணி, என்னை விட்டுடாதே! நீயில்லாமே நான் இருக்க முடியாது... கரை தாண்டி இந்தப் பக்கம் வந்தூடேன்... வந்தூடூ— உன்னை நான் ஒண்ணுஞ் செய்யல்லே. ஒண்ணுங் கேக்கல்லே. உன் மடிலே தலைவெச்சு ஒரு தடவை படுக்கணும். அவ்வளவதான், பூரணி பூரணி!;...”

“நான் காதைப் பொத்திட்டு ஓடினேன். அவன் தொண்டையைக் கிளிச்சுட்டு கத்தினது என் மாரைக் கிழிக்குது.”

“பூரணி! பூரணி!!...”

“நான் முழிச்சிட்டேன். என் எசமானர் என்னண்டை நின்னுகிட்டு என்னையே பாத்துட்டிருந்தார். எனக்கு வேர்வையாக் கொட்டிப்போச்சு. நான் அவர் காலைக் கட்டிட்டு அழுதேன். அவர் ஏன்னு கேக்கல்லே. அந்த மனுசன்கிட்ட அதான் தொந்தரவு. எதுக்குமே ஏன்னு கேக்கமாட்டான். எல்லாந் தெரிஞ்சவன் மாதிரி!

“நானும் சொல்லிக்கல்லே. என்னாத்தை என்னான்னு சோல்றது?”

“மறுநாள் காலையிலே குளிக்கப்போன இடத்துலே அந்த ஆள் மறுபடியும் பின்னாலே கையைக் கட்டிக்கிட்டு, பூமியின் துயரம் அத்தனையும் மொவத்துலே தூக்கிக்கிட்டு நிக்கறான். எனக்குப் பயமாப் போச்சு. இதென்ன வழக்கமாப் போச்சு. வாயைத் திறவாமலே, கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/143&oldid=1025747" இலிருந்து மீள்விக்கப்பட்டது