பக்கம்:அஞ்சலி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204 லா. ச. ராமாமிருதம்

அத்தோடு ஒத்து உதவியாயிருக்க வழி காண்பிக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்களுக்கும் இவர்கள் பெற இருக்கும் குழந்தைகளுக்கும் சம்பந்தமேயில்லைபோல் பேசுகிறார்கள். அதெல்லாம் டாக்டர் வேலை என்கிறார்கள். இது வேடிக்கையா யில்லை?”

அவசரமாய்ப் புகையை இரண்டு இழுப்புக்கள் வெளியே விட்டார். அவர் என்னத்தையோ நினைத்துக் கோண்டு முறுக்கேறிக் கொண்டிருந்தார்.

“இதோ பாருங்கள், இவ்வுலகத்தில் ஒரு உயிரின் பிறப்பைவிட, அழகான, அற்புதமான ஆச்சரியம் எது இருக்கிறது? பூமியெனும் இவ்வளவு பெரிய கிரஹத்தை மூச்சென்ற பேரில், நூலிழையளவில் ஒரு ஸ்ன்னக் காற்றுத் தானே ஏந்திக் கொண்டிருக்கிறது? இதைவிட உங்களுக்கு விந்தை என்ன வேண்டும்? இந்த ஸ்ன்னமான காற்று இல்லாவிட்டால் உயிரேது? உயிரில்லாவிட்டால் உங்கள் உடலுக்கு யோக்யதை ஏது, உலகமே ஏது? உலகின் உடல்கள் அத்தனைகளிலும் இந்த உயிர் நூல் கோர்த்துக் கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. அதனால் ஒரு குழந்தைப்பேறு, சிருஷ்டியே, எவ்வளவு பெரிய பொறுப்பு? இந்தப் பிராண நூலைப் பின்னமாகாது காப்பாற்றுவது எவ்வளவு மகத்தான, லட்சியமான, பெருந்தன்மையான காரியம்? ஆனால் யார் இப்படி நினைக்கிறார்கள்? பெண்கள் பெரியவர்களாகிறார்கள். ஸ்திரீகளாகிறார்கள். ஆனால், புத்தியின் வளர்ச்சி மாத்திரம் முழங்கால் மட்டோடு நின்றுவிடுகிறது. சிட்டுக் குருவி மாதிரி படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு தத்தித் தத்தித் தரையோடு தவிப்பார்களே தவிர, காரிய பாகத்தில் ஒன்றுமில்லை. பெரிய குழந்தைக்குச் சின்னக் குழந்தை பிறக்கிறது. இந்த சந்ததி எப்படி சரியாயிருக்கும், சரியாயிருக்க நியாயமேது? No

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/214&oldid=1026464" இலிருந்து மீள்விக்கப்பட்டது