பக்கம்:அஞ்சலி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 217

“காயத்ரீ!”

என் குரல் எனக்கே வேற்றுமையாய், தனிமையாய் ஒலித்தது.

“காயத்ரீ! காயத்ரீ!!” அறைக்கு ஓடினேன். அறைக்கு, அறை.

“காயத்ரீ! காயத்ரீ!! காயத்ரீ ஈ ஈ!!!”

பாம்புப் படம்போல் என்குரல் மீண்டும் மீண்டும் தலைதுாக்கி எழுந்து என்மேலேயே மோதிற்று. என்னுள் ஏதோ உடைந்தது. மூச்சுத் திணறிற்று. மூச்சுக்குத் தவித்துக்கொண்டு, கைகளை அகல விரித்தபடி, ஜன்னலண்டை ஓடினேன்.

வார்த்தைகள் என் அடிவயிற்றிலிருந்து புறப்பட்டன. அவைகளின் ஒசையும் அர்த்தமும் எனக்கே புதிதாயிருந்தன. முதலில் எண்ணங்களாக உருவெடுக்கும் இடைவெளியிலாது. நேரேவாக்காக மாறிவிட்ட உணர்ச்சிகளின் வேகம், என்னுள் சுருட்டிய எஃகுச் சுருள் விடுதலைக்கு முயல்வதுபோல் என்னை விசிறியடித்தது.

“காயத்ரீ—” ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு கத்தினேன். என் கத்தல் வெளியே மையிருளில் நீந்திக் கொண்டிருக்கும் அணுக் கோசங்களுடன் கலந்தது.

“காயத்ரீ! உன்பேர் காயத்ரீ, சரஸ்வதி, சாம்பவி. ஹைமவதி, எதுவாயிருந்தாலும் சரி இப்பவே திரும்பிவிடு. காயத்ரீ, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. காயத்ரீ, திரும்பு உன்நெஞ்சு கல்லாயிருந்தாலும் சரி, உன் வயிறு கல்லில்லை. உன் வயிற்றில் என் வித்து முளைத்து மூச்சு விட்டு வளர்ந்து வெளிவந்திருக்கிறது. அதற்காக, வேனும் திரும்பி வந்துவிடு. காயத்ரீ, நம் உள்ளம் உடல் அந்தரங்கங்களை ஒருவருக்கொருவர் அறிந்தபின், உனக்கு என்னை விட்டுப் பிரியவும் மனந் துணிந்ததா? என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/227&oldid=1026523" இலிருந்து மீள்விக்கப்பட்டது