பக்கம்:அஞ்சலி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 225

பழைய காயத்தின் புதிய நினைவேகம் மூச்சு தேம்பிற்று.

அவன் உதடுகள் வடுமேல் ஒற்றின. அவளுக்குப் புல்லரித்தது. அவனைத் தழுவிக்கொண்டாள். அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அவள் விழிகள் ஒளி வீசின.

“காஞ்சியில் மாவடி சேர்வை நீங்கள் கண்டதுண்டோ?”

இல்லையென்ற பாவனையில் தலையை ஆட்டினான்.

“காஞ்சி ஸ்தல ஐதீகமே அதுதான்!”

“எது?”

“இது—”

அவள் தழுவலில் அவன் எலும்புகள் கழன்றன.

விளக்கில் சுடர் முறுக்கியது.

மேஜைமீது தட்டில், ஆப்பிள் முகம் சிவந்தது.

திராட்சை கொத்தாய் விழி பிதுங்கிற்று.

தும்பியின் சிறகுபோல் அவர்களிடையே திரைமடுத்த .வெட்கம் பிய்ந்து, ரேக்குகள் அவர்களைச் சூழ்ந்து, மிதந்து மிளிர்ந்தன.

“ஏகா, இதென்ன பேர்? ஆண்பிள்ளை மாதிரி!”

“நானே ஆண்பிள்ளை மாதிரிதானே யிருக்கேன்!”

ஏகா தன் தோள்களை வெற்றியுடன் பார்த்துக் கொண்டாள்.

அ. —15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/235&oldid=1033521" இலிருந்து மீள்விக்கப்பட்டது