பக்கம்:அஞ்சலி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238 லா. ச. ராமாமிருதம்

கிழித்தேனோ?
இப்போது சீறினது
என் மண்டையா?
வத்தியின் மருந்துத் தலையா?

எப்படி நான் நெருப்பு வைக்காமலே கும்மட்டி பற்றிக் கொண்டது? சீ! இதென்ன பித்துக்கொள்ளித்தனம்? பற்ற வைக்காமலே பற்றிக்கொள்ளுமா? நான் என்ன, தூக்கத்திலேயே வேலை செய்கிறேனோ? அப்படி ஒரு கோளாறு இருக்காமே!”

—ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தடவையும் இவ்வளவு கணக்குப் பண்ணியா காரியங்கள் செய்கிறோம்? செய்தால் இவ்வளவு காரியங்களா கணக்காகின்றன? டேயம்மாடி? இப்படிக் கணக்கானால், இந்தக் கணக்கு எல்லை யுண்டோ? எல்லைப் படுத்தத்தானே கணக்கே ஏற்பட்டிருக்கிறது! எல்லையில்லாதுக்கும் எல்லை நாட்டும் கணக்கு.

ஒன்றின்மேல் ஒன்று
அடுக்கடுக்காய்
ஒன்பது
தொண்ணுாறு
தொள்ளாயிரம்
90 ஆயிரம்
90,000000

0000000000000000000000000 ஏற்றிக் கோட்டை கட்டி அடுக்க அடுக்க, பாரம் ஏறி, கட்டிடம் தலையாட, அப்பவும் விடாது இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று பாரம் ஏற ஏற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/248&oldid=1026719" இலிருந்து மீள்விக்கப்பட்டது