பக்கம்:அஞ்சலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தரங்கிணி 19


“என் தாயாரைக் கொன்று கொண்டிருந்தேன்.”

“ஆ...?” அவன் தோளண்டை போய்க்கொண்டிருந்த அவளது கை சட்டெனப் பின் வாங்கிற்று. அவன் நேருக்கு நேர் அவள் முகத்தை இன்னமும் பார்க்கவில்லை. தனக்குத்தானே தன் கனவைத் தன்னெதிரே விரித்துப் போட்டுக்கொண்டிருந்தான்.

“நான் கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். வெள்ளம் அமோகமாய்ப் புரண்டு அம்மாவை அடித்துக்கொண்டு போகிறது. நான் அவளைத் தூக்கக் கை நீட்டுகிறேன். என்னையும் தன்னுடன் இழுத்துவிட்டாள்; நான் தப்பப் பார்க்கிறேன். ஆனால் விடமாட்டேன் என்கிறாள். என் இடுப்பைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு, கோரமாய்ச் சிரித்தவாறு என்னை உள்ளே இழுக்கப் பார்க்கிறாள். திணறுகிறேன். அவள் கழுத்தை நான் பிடிக்க, என்னை அவள் உள்ளே இழுக்க, ஜலம் என் மூக்கு, கண், செவியில் புகுந்து நான் கத்த வாய் திறக்கையில் வாயுள்ளும் புகுந்து விழித்துக்கொண்டேன்.”

அவன் முக முழுவதும் வேர்வை கொப்புளித்திருந்தது. தலைமயிர் அடை அடையாய்க் கசகசத்தது. அவள் கையிலிருருந்து டம்ளரை வாங்கி, ஜலத்தை மடக்கென்று அவசர மாய்க் குடித்தான். ஜன்னலுக்கு வெளியில் ரயில் துாரத்தை உதைத்துக்கொண்டிருந்தது.

வெளியே பார்த்தபடி: “நான் என்னைப்பற்றி உன் ஆசிடம் முழுக்கச் சொல்லவில்லை, தரங்கிணி. நான் கசந்து கசந்து தொப்புள் வரை கசந்து உடலெல்லாம் விஷமாய்ப் போனேன்! என் தாய் ஒரு வாழாவெட்டி.

“நான் வயிற்றில் இருக்கும்போதே அசட்டுத்தனமாய்ப் புகுந்த வீட்டாரை ஆக்ரமித்துக்கொண்டு தாய் விடு வந்துவிட்டாள். பிறந்த வீட்டு அகந்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/29&oldid=1020548" இலிருந்து மீள்விக்கப்பட்டது