பக்கம்:அஞ்சலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 லா. ச. ராமாமிருதம்

கலப்பாயிருக்கின்றன. தரங்கிணி, இப்போது நினைத்துக் கொள்கிறேன். இன்று மாதிரியிருக்கிறது. இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன், நாம் உண்மையென்று நினைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மனத்திலிருப்பதை மாற்றிக் கொண்டதெல்லாம் வெறும் பிதற்றலாகவும். இப்பொழுது நம்மேல் படர்ந்துவரும் பொய்மைதான் நிலையாகவும் மாறிவிடும் போலிருக்கிறது. இனி என்னால் இதைச் சகிக்க முடியாது. நான் நாளைக்குப் போய்விடப் போகிறேன் என்பதை ஒரு தினுசில் வரவேற்கிறேன். இந்தப் பொய் மையிலிருந்து விடுதலையல்லவா? திரும்பி வருகையில் எப்படியிருப்போம் என்று—”

அவளிடமிருந்து அழுகையும் சிரிப்பும் கலந்து ஏதோ ஒரு புதுச் சப்தம் உடைந்து வந்தது. சோகம் கரை கடந்த பின்னர் தோன்றும் ஏளனம் அவள் குரலில் ஒலித்தது.

“உண்மை என்றைக்கும் பிதற்றலாய்த் தானிருக்கும். அவாளவாளுக்கு உள்ளுக்கு உள்ளுக்கிருப்பதை விண்டு பார்த்தாலோ, பார்க்கப் பார்த்தாலோ பேத்தல்தான். நாம் விண்டு பார்த்ததுள், நாமே சின்னக் குழந்தையாய் உட்கார்ந்திருந்ததை நாமே கண்டோம் நமக்கு அது ஆச்சரியமாகவும் இன்பமாயுமிருந்தது இப்போ அந்த நிலையிலிருந்து மீண்டுவிட்டோம்—இல்லை மீண்டு விட்டோம்னு நினைச்சுண்டிருக்கோம். நாமே நமக்கே காரணமில்லாமல் ஏற்படுத்திக்கொண்ட அக்ரமம்தான் இது!”

“உஷ்—தரங்கிணி, அழாதே” அவன் கைகள் மடி யிலிருந்து எழுந்து எழுந்து தவித்தன. அவள் கண்கள் அவன் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் எழுந்தான்.

“எங்கே போறேள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/54&oldid=1033404" இலிருந்து மீள்விக்கப்பட்டது