பக்கம்:அஞ்சலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உயிர்

கரையோரம், என் தோளில் பானையைத் தாங்கிக் கொண்டு நின்றேன். பானையில் விரிசலோ என்னவோ, பாலும் நீரும் கசிந்து, கழுத்திலும் மார்பிலும் வழிந்தது. கால்களை சிற்றலைகள் கழுவின.

“கொஞ்சம் முன்னால் வா-” சாஸ்திரிகள் என்னைப் பிடித்துக் கொண்டார்.

என் பலம் கொண்ட மட்டும் பானையை எட்ட சமுத்திரத்தில் வீசியெறிந்தேன். காத்திருந்த கைபோல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணிர்த் திரையூடே கண்டேன். அலையின் சுழிப்பில் என் தங்கையின் அஸ்தி அவ்வண்ணம் மறைந்த அந்த கrணமே ‘தரங்கிணி’ கருவூலமாய், அவள் பெயரோடு நெஞ்சில் ஊன்றிப்போனாள்.

அவ்வளவு சிறிய பொறியினின்று, கணத்திலும், த்ருனைத்தில் கதை எப்படி உண்டாகிறது?

இது இன்றைக்கு ஏறக்குறைய இருபத்தி ஏழு வருடங்களாய் எழுத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கு இன்னும் புரியாத இன்பத் திகைப்பாய்த்தான் இருக்கிறது.

ஆனால் ஒன்று சொல்வேன், வாழ்வில் நித்தியத்தின் சாயை நம்மேல் படருவது ஒரு சில நிமிடங்கள்தான். அறிந்தோ அறியாமலோ, அந்நிமிடங்களுக்காகத்தான் நாம் உயிர் வாழ்கிறோம், நீக்கிறோம், வைத்திருக் கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/6&oldid=1030104" இலிருந்து மீள்விக்கப்பட்டது