பக்கம்:அஞ்சலி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 53

மாஞ்சி நீனாவின் பாவாடையைச் சரிப்படுத்தி, மீனாவின் வாயை மூடியிருத்தினாள். “எத்தனை தடவை தான் சொல்றது மீனா, வாயைத் திறந்துண்டு தூங்கா தேடின்னு?” ஆனால் தூங்கறவாளுக்குத் தூங்கறப்போ எப்படித் துரங்கறோம்னு தெரியும்?

எதிர்ப் படுக்கைப்பக்கம் அவள் கண்கள் சென்றன. அவள் கணவனைக் காணோம். படுக்கையை விட்டெழுந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். மொட்டை மாடியில் அவன் உருவம் தெரிந்தது.

“இத்தனை நாழிக்குமேலே என்ன பண்றேள்?”

பின்னால் அவள் குரல் திடீரெனக் கேட்டதும், சற்றுத் திடுக்கிட்டாற்போல் அவன் அவள் பக்கம் திரும்பினான்.

“ஓ நீயா?”

“பின்னே யாருன்னு நினைச்சேள்?”

மாஞ்சி உடம்பை ஒடுக்கிக் கொண்டாள்.

“உங்களுக்குப் பனி அடிக்கல்லே? சட்டைகூடப் போட்டுக்காமல் இப்படி நிக்கறேளே!”

“மாஞ்சி, இங்கே வா.”

அவள் கணவனின் விரிந்த கைகளின் வீச்சிற்குள் அடையும் போதெல்லாம் மாஞ்சிக்கு ஒர் உணர்ச்சி ஏற்படும்—ஆடு மாடுகள் மேய்வதற்கென ஏதோ வேலி போட்டுத் தடுத்த பரந்த அடைப்பிற்குள் நுழைவது போல். இத்தனைக்கும் ஜமதக்னி அவ்வளவு உயரம் என்றோ ஒற்றைநாடியென்றோ சொல்வதற்கில்லை. ஆயினும், இடுப்பிலிருந்து விசிறி எழுந்து விரிந்த மார்பிலிருந்து கைகள் முழங்கால் வரை நீண்டு தொங்கின. அந்த மார் விரிவும் கைவீச்சினாலேயே, நடையுடை பாவனைகளிலும், சில சமயங்களில், அவன் கால்களைச் சற்று அகல விரித்துப் பூமியில் அழுந்த ஊன்றி நிற்கும் தோற்றத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/63&oldid=1024034" இருந்து மீள்விக்கப்பட்டது