பக்கம்:அஞ்சலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 87

எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். திடீரென எழும் வாஞ்சை தாங்க முடியாதபடி உடலை அழுத்தும்.

“ஏன் இப்படி வதைக்கிறாய்?”

“நான் உன்னை விடப்போவதில்லை, என் வேளை வரும் சமயத்தில் உன் மடியில் தலை வைத்துத்தான் உயிர் விடப்போகிறேன். ஒரே சமயத்தில் மாதாவும் குழந்தையுமாய் யாரால் இருக்க முடியும்? அந்தப் பராசக்தியாலும் என்னாலும்தான்! நான் நெருப்பில் குளிச்சவளடா!”

இப்படித்தான், ஒவ்வொன்றிலும் தன் சேகத்தை காவிய கனத்தைப் பூவின் இதழ்கள் போல் அவ்வளவு அழகுடன் மணத்துடன் லேசாய் அவளால்தான் முடியும்.

அப்பா எப்படியேனும் அவள் கையை மறைத்து யாருக்காவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று மலைப் பிரயத்தனங்கள் பண்ணினார். அநேகமாய்ச் சாதிக்கக்கூடச் சாதித்துவிட்டார். வரனுக்கு வடக்கே எங்கோ துார தேசத்தில் உத்தியோகம். .

“லட்சுமி, அவன் உன்னைப் பார்க்கவரும் வேளைக்கு நீ புிடில் கிடில் ஒன்றும் வாசிக்க வேண்டாம். கைமேல் மேலாக்கைப் போட்டு மறைத்துக்கொண்டு. மறைத்துக் கொள்வதற்காக மறைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் காண்பித்துக்கொள்ளாமல் சாதாரணமாய் உட்கார்ந்து கொண்டிரு. எல்லாம் சரியாய்ப் போய்விடும்!”

“என்னப்பா! இதெல்லாம் எத்தனை நாளைக்கு முடியும்னு நினைக்கிறேள்?” லட்சுமி அலுப்புடனதான் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/77&oldid=1033419" இலிருந்து மீள்விக்கப்பட்டது