பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

வித உருவங்களில் அழகாக, நாகரிகச் சாய்மானங்கள் பல அமைந்துவிட்டன. ஆராய்ச்சி, அறிவு. ஆர்வம். உழைப்பு எல்லாவற்றின் கலப்பினாலும் பிறந்துள்ள நலன்கள் மிகப்பல.

ஆனால், எல்லாம், சோம்பேறிகளை அதிகக் சோம்பேறிகளாக வளர்ப்பதற்குத்தான் பயன்படுகின்றன. உழைப்போருக்கு உதவுவதில்லை. யாருக்கு வாழ்க்கை வசதிகள் தேவையோ அவர்களுக்கு இவை ஓர் சிறிது கூட உதவியளிக்கவில்லை. சோம்பேறிகள் அதிகச் சோம்பேறிகளாக வளர வளர, உழைப்போர் அதிகம் - மிக அதிகமாக- உழைக்க வேண்டியதாகிறது.

உழைப்பவர்களுக்கோ குறைந்தபட்ச உணவு, ஓய்வு, தங்கும் இடம், உடை முதலியவைகளுக்கு கூட பஞ்சம் ஏற்பட்டுவிடுகிறது.

அப்படியானால், அறிவின் மின் வெட்டு ஆராய்ச்சியின் விளைவு எனப் பிரமாதப் படுத்தப்படுகிறவை யெல்லாம் சாதாரண மக்களுக்காகத்தான் -பெரிது. மக்களின் - உயிர்க்குலத்தின் உயர்வுக்குத் துணை செய்யத்தான் என்பது அர்த்தமற்ற பேச்சாக ஒலிக்க வில்லையா? அவை யெல்லாம் - நீளப்பேசுகிற வாச்சாலகர்களின் சுயநல எத்துவேலைகள் - வெறும் ஹம்பக் என்று தானே சொல்லப்பட வேண்டும்:

விளக்குக்கு மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. பிற எண்ணெய்கள் வாங்கி எரிக்கக் கூடப் பணம் இல்லை. ஆகவே சாப்பாட்டு வேலையை அந்திப் பொழுதிலேயே முடித்துவிட்டு இருட்டிலே ஒடுங்கி விடும் குடும்பங்கள் எத்தனையோ உண்டு நம் நாட்