பக்கம்:அடி மனம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அடிமனம்

குழந்தையை வளர்த்தால் கூடிய வரை பயங்களைக் குறைத்து விடலாம் என்றும் கூறுவார்கள்.

இருட்டைக் கண்டாலும் குழந்தைக்கு இயல்பாகவே பயம் உண்டென்றும், இந்த பயமும் பரம்பரையாக வந்தது என்றும் சிலர் கூறுவார்கள். ஆதி மனிதர் பகலை விட இரவு நேரங்களிலேதான் அதிகமான துன்பங்களை அடைந்திருக்க வேண்டும்.

இருட்டைப் பற்றிய பயம் குழந்தைக்கு இயல்பாகவே கிடையாதென்று வாதிப்பவர்கள் உண்டு. குழந்தையை இருட்டறையிலேயே தூங்க வைத்துப் பழக்கப்படுத்துவதால் இந்த இருட்டுப் பயத்தை இல்லாமலேயே செய்து விடலாம் என்பார்கள்.

பிறந்த குழந்தைக்கு எவ்விதமான பயமும் கிடையாதென்றும் பயங்களெல்லாம் பின்னால் ஏற்படுகின்றவையே என்றும் கூறுபவர்கள் உண்டு.

மேலே குறிப்பிட்ட பயங்களெல்லாம் வெளியுலகத்தால் ஏற்படக் கூடியவைகள். இவை போன்ற பயங்களல்லாமல் வேறு விதமான பயங்களும் உண்டு.

இத் என்ற மனப் பகுதியிலே பல வகையான தீய உந்தல்களும் இச்சைகளும் இருக்கின்றன. வல்லவா? அவற்றின் தூண்டலால் ஏதாவது தவறு செய்து விடுவோமோ என்கிற பயம் உண்டாகிறது. அதீத அகம் உயர்ந்த நெறி முறையை வகுக்கின்றது. அந்த நெறி முறைக்கு மாறாக நடந்து விட்டபோது அதனால் அவமானமும் பயமும் தோன்றுகின்றன.

பொதுவாகப் பார்த்தால் மனத்திற்குள்ளே உண்டாகின்ற மேலே கூறிய இரண்டு வகையான பயங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/73&oldid=1005349" இருந்து மீள்விக்கப்பட்டது