உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

தாங்கிச் சுமந்து கொண்டிருத்தல்

தாங்கித் தடுக்கிக் கிழவியைக் கூட்டிக்கொண்டு வருதல்

தாசி வேசிகள் இல்லா ஊர்

தாட்டுப் பூட்டென்று குதித்தல்; அதிகாரம் செய்தல்

தாபத்தையும் கோபத்தையும் தாங்கிக் கொள்ளல்

தாபமும் தவிப்பும்

தாய் பிள்ளை ஒருவரும் வரவில்லை

தாயினுஞ் சிறந்த தயாநிதி (மனோன்மணீ 3-2-187)

தாயினும் நல்ல தயை உடையோர்

தாயும் சேயும் நலம்

தாரை தப்பட்டைகளை முழக்குதல்

தாவிக் குதித்தும் தாண்டியும் செல்லுதல்

தாழ்த்திக்கூறி அவமானப் படுத்துதல்

தாழ்ந்து குனிந்து வணங்குதல்

தாழ்ந்து (கீழே) தொங்குதல்

தாழ்ந்து பணிந்து வணங்குதல்

தாழ்ந்து வீழ்ந்து தடுமாறுதல்

தாழ்மையும் கீழ்மையும் அடைதல்

தாழ்வோ குறைவோ ஒன்றும் ஏற்பட்டுவிடாது

தாளமும் பண்ணும் (இராகமும்) தவறாமற் பாடுதல்

தாறுமாறாகக் கிடத்தல்; பேசுதல்; நடத்தல்

தாறுமாறாகத் தட்டுக் கெட்டுப் போதல்

தான்றோன்றித் தம்பிரான்

தான தருமங்கள் செய்தல்

தானந்தாங்கிச் சீலந்தலை நின்றவர் (மணி 30-1)

தானமுங் தருமமும் தகவும் தன்மைசேர் ஞானமும்

சான்றவர் (கம்ப 2-1-80)

திக்கற்ற அநாதை (கல்கி)