பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

தூபதீப நைவேத்தியஞ் செய்தல்

தூய்மையாகவும் துப்புரவாகவும் வீட்டை வைத்திருத்

தல்

தூய்மையும் வாய்மையும் உடையவர்

தூய்மையும் நறுவிசாயுமிருத்தல்

தூர்த்துத் துடைத்து விடல்

தூவியஞ்சிறை மெல் நடை அன்னம் (ச 189-8)

தூற்றலுந் தும்பலுமாய்ப் பெய்கிறது (மழை)

தெட்டத் தெளிய ( - தெள்ளத்தெளிய)ச் சொல்லுதல்

தெய்வத் திருவருள்

தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ விரும்

பாத, முடியாத

தெரிந்தும் அறிந்தும் செய்த குற்றம்

தெரியத் தெரிதல் - தெளிவாய் அறிதல்

தெரியாத புரியாத விஷயம் இல்லை

தெவிட்டாத இன்பத் தெள்ளமுது

தெவிட்டாத ஞானத் தெளிவைக்காட்டி (விநா-அக)

தெவிட்டாத தெள்ளமுதம்

தெள்ளத் தெளியக் கண்டுகொள்ளலாம்

தெள்ளத் தெளியத் திட்டவட்டமாகக் கூறுதல்

தெள்ளமுதினை ஒத்த உள்ளத்தாள்

தெள்ளிக் கொழித்தல்

தெள்ளிய அமுதத்தீந் தமிழ்மொழி

தெள்ளிய ஒள்ளறிவு உடையோன் (தணிகைப்பு. அகத்

253)

தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி

தெள்ளிய நல்லிசைப் புலவர்

தெள்ளு சுவையமுதங் கனிந்த ஆனந்தக்கடல் (குமர

94)