பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கிண்டு - தோண்டு
கிரணம் - கதிர்
கிரமம் - ஒழுங்கு
கிலி - வீண் பயம்
கிழங்கட்டைகள்- வயது முதிர்ந்தவர்கள்
கிளர்ச்சி - உற்சாகம்
சீர்த்தி - பெரும்புகழ்
கீடம் - புழு
குடங் கை - உள்ளங் கை
குடித்தனம் செய்தல் - இல்வாழ்வு வாழ்தல்
குண்டுணி - கோள்
குதலை - மழலை
குதிர் - நெற்குதிர்
சூளுறவு செய்தல் - சத்தியஞ்
குயின் - குயில், மேகம்
குருட்டு நம்பிக்கை - காரணமின்றிக் கொள்ளும் மூட நம்பிக்கை
குவவுத் தோள் - திரண்ட தோள்
குழவி - சிறுகுழந்தை
கேளிர் - உறவினர்
கைத்திடுதல் - கசந்திடுதல்
கொக்கரித்தல் - சினத்துடன் பேசுதல்
கொப்பு - கிளை
கொழு கொம்பு-கொள் கொம்பு
கோதானம் - பசுவைத் தானம் செய்தல்
கோள் - கிரகம்
சந்தடி - சலசலப்பு; சத்தம்
சழக்கு - சண்டை
சஸ்திரம் - படைக்கருவி
சாக்காடு - மரணம்
சால்பு - சான்றாண்மை
சிக்கடி முக்கடி - சிக்கல்
சித்தன் - அறிவுமிக்கவன்; ஆற்றல் மிக்கவன்.



சித்தி - வெற்றி
சிந்து - சிந்து கின்ற; கடல்
சிரத்தை - ஈடுபாடு
சிறுமைப்படுத்தல் - கேவலப்படுத்தல்
சீர் - பெருமை, சிறப்பு
சீர்த்தி - பெரும்புகழ்
சீர்மை - சிறப்பு
சீலம் - ஒழுக்கம்
சுத்தன் - பரிசுத்தன்; கடவுள்
சுபிட்சம் - செழிப்பு
சுயமாக - தானே
சூட்டு - சேவலின் கொண்டை
சூளுறவு செய்தல் - சத்தியஞ்செய்தல்
செட்டு - சிக்கனம்
செத்தை - செற்றை
செருக்கு - தருக்கு, அகம்பாவம்
சேமலாபம் - உடல், உள்ளநலங்கள்
சேவித்தல் - வணங்குதல்
சொக்கி - மயங்கி
சொகுசாக - உல்லாசமாக
சொட்டை - குறைபாடு
சொத்தை - கெட்டுப்போன பொருள்
சொள்ளை - கெட்டுப் போன பொருள்
சொற்புத்தி - பிறர் அறிவுரையைக் கேட்கும் அறிவு
சொன்னம் - பொன்
சோகக்கிதம் - துன்பப் பாட்டு
தட்டுக் கெட்டுப் போதல் - நிலைகெட்டுப் போதல்
தண் அம் கதிர் - குளிர்ந்த அழகிய கிரணம்