பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

ஆதம்பா தமில்லாதவன் - ஆதரவில்லாதவன்

ஆதரத்தோடு ஆதரித்தல் - அன்போடு ஆதரித்தல் (திருப்பு 327)

ஆதளை மாதளை - மனக்கலக்கம்

ஆதாளி பாதாளியாய் (--ஆரவாரமாய் ) இருத்தல்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி (திருவா 155)

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன்; ஆனந்த வெள்ளம்

ஆதியும் அனாதியும் ஆன கடவுள்

ஆதியோடந்தமாகக் கூறுதல் - முதலிலிருந்து முடிவு வரை கூறுதல் (பிரதாப 17)

ஆபத்து சம்பத்து - வாழ்வுதாழ்வு, இன்பதுன்பம், சுகதுக்கம்.

ஆபத்து சாபத்துக்கு உதவும் பணம்

ஆபாசமும் அலுப்பும் தீர

ஆபாசமும் அழுக்கும் சேர்ந்திருக்குமிடம்

ஆமையைப் போல அடங்கி ஒடுங்குதல்

ஆமாலை சோமாலை - திக்குமுக்கு, மிகுசோர்வு

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் (நாலடி 63)

ஆய்ந்தோய்ந்து தேர்ந்து தெளிதல்

ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் அவசரப்பட்டுச் செய்தல்

ஆய்ந்தோய்ந்து பார்த்தல்

ஆயிற்று போயிற்று என்று அரட்டுதல்

ஆயிற்றுப் போயிற்று என்று கிடத்தல் - சாப்படுக்கையில் கிடத்தல்

ஆயுந் தொறுந்தொறும் இன்பம் தருந்தமிழ்

ஆர்ந்து அமர்ந்து செய்தல்

ஆர்வம் பொங்க அணைத்துக் கொள்ளல்