பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

ஆலமுண்ட நீலகண்டன்

ஆலே பூலே என்று அலுப்பிக் கொண்டிருத்தல்

ஆலை மாலை - ஆவட்டை சோவட்டை, சோர்வு, களைப்பு, தொந்தரவு

ஆவட்டை சோவட்டையாயிருத்தல் - மிகக் களைத்தல், மூச்சுவாங்கல், இறக்கும் நிலையில் இருத்தல்

ஆவட்டை சோவட்டையாய் விழுதல் - சோர்ந்து விழுதல்

ஆவதும் அழிவதும் பெண்ணாலே

ஆவலம் கொட்டி ஆர்த்தல் - (மகிழ்ச்சியால்) கை கொட்டி ஆர்ப்பரித்தல் (கம்ப 6-1874)

ஆவலும் பரபரப்பும் ஏற்படல்

ஆழ்ந்தகன்ற நுட்ப அறிவினால் நுணுகியறிதல்

ஆழ்ந்து அமிழ்ந்து கிடக்கும் - ஆழ்ந்து புதைந்து கிடக்கும்

ஆழமும் அகலமும்

ஆழும்பாழும் ஆக்கல் - வீணாக்கல்

ஆழும்பாழுமாய் அழிந்து போன ஊர்

ஆற அமர (-மெதுவாய், அமைதியாய், சாந்தமாய், சாவதானமாய்)ச் செய்தல், யோசித்தல்

ஆறல் பீறல் - உபயோகமற்ற பீறல் சாமான்

ஆற்றலும் அழுத்தமும் பெறும் சொல்

ஆற்றலும் அனுபவமும் உடையவர்

ஆற்றலும் ஆண்மையும் உடையவர்

ஆற்றார்க்கும் அலந்தார்க்கும் துணையான ஆண்டவன்

ஆற்றித் தேற்றுதல் - சமாதானப்படுத்துதல்

ஆற்றிப் போற்றிக் கொளல்

ஆறாட்டம் போராட்டமாயிருத்தல்