பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

சிரிப்பும் விளையாட்டுமாய் எப்போதும் இருப்பவர்

சில்லபொல்லமாகச் சிதறிப் போதல்

சில்லென் கிளவி மெல்லென மிழற்றல் (பெருங் 4-5-17)

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துக் கூறல்

சில்வாழ் நாட் பல்பிணிச் சிற்றறிவிற் சிற்றுயிர் (ஆனந்த

2-56)

சிவனடி மறவாத சிந்தையினர்

சிள்ளுசிள்ளென்றே சீறிவிழுதல் (நீதி. கும்மி. 15)

சிற்றுயிர்க்கு உற்ற துணைகல்வி (நீதி நெறி வி. 2)

சிற்றியல், சிறுமை, ஆற்றல், சிறு தொழில் மனிதர்

(கம்ப 5-3-143)

சிறகடித்துப் பறந்து செல்லுதல்

சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றுதல்

சிறப்பாகவும் சுமுகமாகவும் நடத்தி வைத்தல் (கல்கி)

சிறப்பினையுஞ் சீரினையும் செப்புதல்

சிறப்பும் சீரும் இன்றி (அகம் 369)

சிறப்புஞ் சீரும் உடைய சீரியோர்

சிறப்பும் சீலமும் உடைய சீரியோர்

சிறப்பும் செல்வமும்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் (நறுந்

தொகை 51)

சிறந்து பொலியும்

சிறியர் செய்பிழையைப் பெரியவர் பொறுக்க வேண்டும்

சிறுமை செய்யும் வறுமை

சிறுமைப் பட்டுச் சீரழிதல்

சிறுமைப் படுத்திச் சீரழிதல்

சின்னஞ்சிறு கண்கள்

சின்னஞ் சிறுசுகள் - குழந்தைகள்