உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

சொல்லழகும் பொருளழகும் பொதிந்த பாடல்

சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது (பழ)

சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தல் ; ஓடி

விடுதல்

சொல்லும் செயலும் வேறுபடாத

சொள்ளை சொட்டை ஏதாவது சொல்பவன்

சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் உடைய குறள் ;

நூல்

சொற்சுவை பொருட்சுவை மலிந்த நூல்

சொற்சுவையும் பொருட்சுவையும் பொருந்திய நூல்

சொற்பிழை பொருட்பிழை இன்றிப் பேசுதல்

சொற்புத்தியுமில்லை சுயபுத்தியுமில்லை

சொன்மதியும் தன்மதியும் (- சொற்புத்தியும் சுயபுத்தி

யும்) உடையவன்

சொன்னால் வெட்கக்கேடு அழுதால் துக்கக்கேடு

சோகக்கீதம் பாடிச் சோம்பிக் கிடத்தல் (அண்ணா)

சோச்சியும் பாச்சியும் கொடுத்தல் - சோறும் பாலும்

கொடுத்தல்

சோம்பலும் சோர்வும் அடைதல்

சோர்ந்து தடுமாறுதல் ; துயரப்படுதல் ; மனந்தளர்

தல் ; பின்வாங்குதல் ; பின்னடைதல்.

சோர்வும் களைப்பும் அடைதல்

சோலி மாலி செய்தல் ; தொந்தரவு செய்தல்

சோற்றுக்குச் செலவும் பாருக்குப் பாரமுமாய் இருப்

பவன்

சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருத்தல் (கல்கி)

சௌக்கியமாகவும் சௌகரியமாகவும் வந்து சேர்தல்

சௌகரியமும் சௌக்கியமும் தருமிடம்

ஞாலங் கறுப்பாக்கும் நள்ளிருள் (பாரதிதா)