பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்ப்புப் புண்களிலிருந்து பெருக்கெடுத்துப் பாயும் குருதி வெள்ளத்தால் கழலும் காலும் கறைபட்ட நிலைகண்ட பின்னரும், களம்விட்டுப் பெயரார் அப்படை வீரர். பகைவர் அறவே அழிந்து, குறைவிலாப் பெருவெற்றி பெற்ருன் கோமகன் என்பதை அறிந்த பின்னரே வில் நாணைத் தளர்த்துவர். இதையெல்லாம் பலர் கூறப், புலவர் பண்டே அறிந்திருந்தார்.

அத்துணைச் சிறந்த வில்லாளராகிய அவர்கள் நிலையை இன்று நோக்கிய புலவர், அவ்வில் வீரர்தாமா இவ்வில்வீரர் என்று ஐயுறவேண்டியவராளுர், வில்லில் நாண் பூட்டுவது எவ்வாறு என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. தம் விற். போர் முறையை அந்த அளவிற்கு மறந்துவிட்டிருந்தார்கள். அந்நிலை கண்டு வியப்பு மேலிட்ட புலவர், அவர்களையே அணுகி, ஆற்றல்மிக்கீர் இந்நாட்டின் அமைதி நிலவும் நல்லாட்சிக்குக் காரணமாய் உங்கள் வில்லாற்றலை உலகம் வியந்து பாராட்டக் கேட்டுளேன். ஆனல், அத்துணைச் சிறந்த வில் வீரர்களாகிய உங்களை நேரில் கண்டக்கால், உங்களுக்கு அவ்விற்போர் முறையில் தொடக்க நிலை அறிவு தான்ும் வாய்க்கப் பெறவில்லை என்பதைக் காணுகின்றேன். என்னே இம்முரண்பட்டநிலை இத்தகு மாற்றத்திற்குக் காரணம் என்னையோ? மனைவி, மக்களை மறந்து, மறவுணர்வு மிக்கு, போர்க்கள வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு, வாழ வேண்டியவர்கள். மனைவி மக்களோடு மகிழ்ந்து வாழும் மனையற வாழ்க்கையில் மகிழ்ந்து கிடக்கின்றனரே, என்னையோ இதற்குக் காரணம்' என்று வினவினர்.

அது கேட்ட அவ்வில்வீரர்களுள் தலையாய ஒருவன், 'அறிவுசான்ற பெரியீர்! நீவிர் எம்மைக் குறித்துக் கேட்டதும்

91

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/101&oldid=1293737" இலிருந்து மீள்விக்கப்பட்டது