பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஃதறிந்த புலவர், தாமும் தம் மனைவியும் இறவாப் பேரின்ப வீடடைதலே, தாம்விரும்பும் பரிசிலாம் என்றனர்; அது கேட்ட அரசனும், அந்தணர் வழிநின்று, செந்தழல் வளர்த்துப் பத்துப் பெருவேள்விகள் பண்ணிப், புலவரைப் பிறவாப்பெருநிலையில் இருத்தின்ை. புலவர் பாலைக்கெளதமனர் பெற்ற இப்பரிசிற் பெருமையை, 'பாடிப் பெற்ற பரிசில், "நீர் வேண்டியது கொண்மின்’ என, “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புக ல் ேவ ண் டு ம்’ என, பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காரைாயினர்' எனப், பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தின், பதிகஆசிரியரும், 'தொடுத்த பெரும் புலவன் சொற்குறை தீர அடுத்துத்தா என்றற்கு வாழியரோ?' என்ற பழமொழி ஆசிரியர், முன்றுரை யரையனகும், 'பல்யானைச் செல்கெழு. குட்டுவன் புகழைச் செய்யுளாகத் தொடுத்த, கெளதமன் என்னும் பெயரிய புலவன், யானும் என் சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத் தா என்ருற்கு, அவன் சொற்குறை தீர்ப்பான் பொருட்டு,உவந்து யாகங்களை நடத்தி, நீ வேண்டிய துறக்கத்தின்கண் நீடு. வாழ்வாயாக எ ன் ரு ன்’ எனக் கூறும் அதன் உரை. யாசிரியரும், (பழமொழி : 316) 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே" என்ற தொல்காப்பியத்திற்கு (தொல்: பொருள்: 78) இமயவரம்பன்தம்பி, பல்யானைச்செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கொளதமனர் துறக்கம் வேண்டினர், என்பது குறிப்பு வகையாக் கொள்ள வைத்தலின் இது பாடாணுயிற்று' என உரை வகுத்த நந்சிஞர்க்கினியரும், 'நான் மறையாளன் செய்யுட் கொண்டு மேனிலை உலகம் விடுத்தோன்' என இளங்கோவடிகளாரும் (சிலம்பு : 28; 137-138) பாராட்டிப் பெருமை செய்துள்ளார்கள்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/18&oldid=1293639" இலிருந்து மீள்விக்கப்பட்டது