பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சேர அரசன்; அதனல் அவனுக்குப், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற ெப ரு ம் .ெ ப ய ர் சூட்டிப் பாராட்டினர்கள், அக்காலப் புலவர்களும் பெருங்குடிமக்களும்.

கொல்லும்ஆனேற்றின் தோலைஉரித்து, சீவாதுவிட்ட அதன் மயிர், அகத்தே மறையுமாறு போர்த்துப்பண்ணிய போர்முரசு, செந்தினை முதலாம் பல்வேறு கூலங்களைக், குருதி யொடு கலந்து, பலியாக ஊட்டப்பெற்று, சேணிடத்துள்ளார் காதுகளும் செவிடுபடுமாறு முழங்க, போர்க்களம் புகும் பேரார்வம் உந்த, விரைந்து முன்னேறிச்சென்று, பகைவர் களின் கடத்தற்கரிய கற்கோட்டைகளை யெல்லாம் வென்று கைக்கொள்ளும் வி ற ல் மி க் க வேழங்களால் மலிந்த குட்டுவனின், வரம்பறியாப்பெருந்தான்ை என, அவன் படைப் பெருமை பாராட்டப் பெற்றுள்ளது காண்க.

'விரவு வேறு கோலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற, அமர்கோள் நேர்இகந்து ஆர்எயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பில் தான்ே’’

-பதிற்று: 29: 11-16

பாரதப்போரில், பாண்டவர் கெளரவர் என்ற இரு திறத்தவர் பெரும்படைக்கும், அப்போர் நிகழ்ந்த பதினெண்நாட்கள் வரையும் உணவளித்துப் புரந்தமையால், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் எனும், புகழ்மிகு பெயர்பெற்ருன் என்றும், தம் முன்னேன் செய்த அவ் அரும் பெரும் செயல் நினைவாகவோ, அல்லது, மாண்டு மறைந்துபோன தன்குல முன்னேர்களின் நினைவாகவோ, ஆண்டுதோறும் விழா.

11.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/21&oldid=1293643" இலிருந்து மீள்விக்கப்பட்டது