பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடுத்துப் பெருஞ்சோறு அளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வ | ழ் ந் த ைம ய ர ல், அப்பெயர் பெற்ருன் என்றும், பாராட்டத்தக்க பேரரசின் மகன ய்ப்பிறந்த பெருமையுடையவன், பல்யானைச்செல்கெழுகுட்டுவன். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது உலகியல் உண்மை; உடன் பிறப்பாளராலும், உயர்ந்து விளங்கின்ை பல்யானைப்செல்கெழுகுட்டுவன். வடபேரிமயங்காறும் சென்று, வெற்றி கொண்டு, அதன் நி ன வ ய், இமயத்தில் தன் விற்கொடியைப் பொறித்து, குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதன் என்ற, சிறப்புடையோணுகிய இமயவரம்பன், நெடுஞ்சேரலாதனின் தம்பியாம் தகவுடையான், இக்குட்டுவன். வெளியத்தே வாழ்ந்திருந்த, வேளிர்குலத் தலைவனுகிய வேண்மான் என்பானின் மகளாம், நல்லினிஎனும் நல்லாள், இவனை ஈன்ற நற்பேறு உடையாள்; இவ்வரலாற்று விளக்கங்கள்,

'மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியன் சேரற்கு

வெளியன் வேண்மான் நல்லினி ஈன்றமகன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.”

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பி

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்’ என்ற பதிற்றுப்பத்து, இரண்டு, மூன்று பத்துக்களின் பதிகங்களான் தெளிவுறப் புலனும்,

வேழங்கள் ம லி ந் த உம்பற்காட்டைத் தன்னகத்தே கொண்ட உம்பற்காட்டு நாடு, நல்லவளம் மிக்க பெருநாடாம். அதனுலேயே, தன்னைப்பாடிய புலவர் குமட்டுர்க் கண்ணஞர்க்கு, அந்நாட்டகத்தனவாய ஐந்நூறு சிற்றுார்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான்் இமயவரம்பன் நெடுஞ்

12

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/22&oldid=1293644" இலிருந்து மீள்விக்கப்பட்டது