பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ளம் புகுந்தால் வெற்றியல்லது தோல்வி காளு விறல் படைத்த அவன், அரசவை அமர்ந்து அறநெறி அரசு நடாத்தும் வழிவகைகளையும் விளங்க அறிந்திருந்தான்். அரசியல் நெறிகாட்டும் அறநூல்களைத், தான்் எத்துணைதான்் ஐயமறக் கற்துத் தேர்ந்திருந்தாலும், அறநூல்களே அறிதலும் அறிவித்தலும், அவைகூறும் வேள்விகளை எடுத்தலும் எடுப்பித்தலும், வறியார்க்கு ஈதலும், வளமுடையார்பால் தாம் ஏற்றலும் ஆகிய இவ்வாறு தொழில் அல்லது வேறு தொழி லநியாமையால் விளங்கிய அறிவினராய்த் திகழும், எக்காலமும் அறநினைவாகவே வாழும் அந்தணர் உள்ளிட்ட ஆன்ருேர்களை வழிபட்டு, அவர் கூறும் வழிநின்று நாடாளும் வழக்கம் உடையவன் அவன். அதல்ை புலவர் பாடும் புகழ் உடைய. யணுயினன். உலகம் அனைத்தும் அவன் உரைவழி நின்று ஒழுகவே, அவன் புகழ் உலகெங்கும் சென்று பரந்தது. அதல்ை புகழ் தேடி அவன் போகானுகவும், புகழ்தான்ே அவனைத் தேடிச் சென்றடையலாயிற்று. இவ்வாறு கற்றும் கேட்டும் சிறந்தோளுய் வாழ்ந்த அவன் சிறப்பியல்புகளெல்லாம், அவன் வழங்கும் பயன்மிகு இன்சொல் வழியே புலப்படக் கண்டு, பாராட்டிற்று உலகம்.

இவ்வாறு நாட்டவர் போற்றும் நல்லோனப் நாடாண்ட பல்யானைச் செல்கெழுகுட்டுவன், கணவரைப் பிரிந்த கடுந்துயரால், தம்மை ஆடை அணிகளால் ஒப்பனைசெய்து கொள்ளவும் விரும்பாது, கண்கலங்கி நிற்கும் காரிகையர் போல் அல்லாது. கணவன்மார், இமைப்பொழுதும் பிரியாது உடனுறையப் பெற்ற பெருழுது பெண்டிரேபோல், அரசமாதேவி, அணிபல அணிந்து, அழகின் திருவுருவாய் அன்பு கலந்த இன்ப வாழ்க்கையுடையராய் வாழுமாறு, மனையற மாண்பு கண்ட மன்னகைவும் வாழ்ந்து காட்டி, வீயா விழுப்புகழ் பெற்று விளங்கினன்.

62.

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/72&oldid=1293702" இலிருந்து மீள்விக்கப்பட்டது