பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் இப்பெருமையெலாம் கண்டு பேரின்பம் கொண்ட புலவர் பாலைக் கெளதமனர், அப்புகழ் பெருகப் பாராட்டிப் பாடிய பாட்டில், வானகம் விளக்கம் பெறும்படி பேரொளி பரப்பி, வறிதே வடக்கில் தாழ்ந்த, சிறப்பமைந்த என்ற பல்வேறு பொருள் கொண்ட அருந்தொடர்கள் அணியசெய்ய நிற்கும் சீர்சால் வெள்ளி என்ற தொடரே அரிய பொருள்நலம் அமைந்திருப்பது கண்டு அப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராக்கியுள்ளார்கள். 24. நெடுவயின் ஒளிறும் மின்னுப் பரந்தாங்குப்

புலி உரை கழித்த புலவு வாய் எஃகம் மேவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி ஆரரண் கடந்த தார் அருந்தகைப்பில் 5 பீடுகொள்மாலைப் பெரும்படைத்தலைவ !

ஒதல், வேட்டல், அவை பிறர்ச்செய்தல், ஈதல், ஏற்றல் என்று அறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்த ஒழுகி ஞாலம் நின்வழி ஒழுகப் பாடல் சான்று 10 நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத்,

திருந்திய இயன்மொழித் திருந்தி இழை கணவ ! குலை இழிபு அறியாச் சாபத்து, வயவர் அம்புகளைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை இடாஆ ஏணி இயலறைக் குருசில் ! 15 நீர் நிலம் தி வளி விசும்போடு ஐந்தும்

அளந்து கடை அறியினும் அளப்பருங்குரையை: நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிருமே. உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது, குரைத்தொடி மழுகிய உலக்கை, வயின்தோறு 20 அடைச் சேம்பு எழிந்த ஆடுறு மடாவின்,

எஃகுறச் சிவந்த ஊனத்து, யாவரும் கண்டு மதிமருளும் வாடாச் சொன்றி,

-5- 65

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/75&oldid=1293705" இலிருந்து மீள்விக்கப்பட்டது