பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிதலால். வானகம் சுடர்வர=வானம் எங்கும் ஒளிபெற. வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால்வெள்ளி=சிறிதே வடக்கில் சாய்ந்து தோன்றும் புகழ் பொருந்திய வெள்ளியாகிய கோள். பயங்கெழு பொழுதொடு = பயன் பொருந்திய பிற நாண் மின்களோடு. ஆநியம் நிற்ப = தனக்குரிய நிலைகளிலே நிலைபெற நிற்பதால். கலிழும் கருவியோடு=நீர் சொரியும் மழைத் தொகுதியோடு. கையுறுவணங்கி = பக்கமலைகளில் படிந்து. மன்னுயிர் புரை இய = உலகத்து உயிர்களை வாழ்விப்பான் வேண்டி, வலன் ஏர்பு இரங்கும்=வலமாக எழுந்து இடித்து முழங்கும். கொண்டல்தண்தளிக் கமஞ்சூல் மாமழை =கொண்டல் என்னும் கீழ்க் காற்று கொண்டுவரும் குளிர்ந்த நீர்த்துளிகளால் நிறைந்த சூல் கொண்ட கருமுகில் கூட்டம். கார் எதிர் பருவம் மறப்பினும்=மழையை எதிர் நோக்கும் கார் காலத்தில் பெய்யாது பொய்ப்பினும். வரைகோள் அறியாது=வரைந்து உண்ணும் வழக்கத்தை அறியாது. உண்மரும் தின்மரும் = உண்ணுவோரும், தின்னுவோரும். யாவரும்=பிற அவர் ஒழிந்த பிறர் அனைவரும். குரைத்தொடி மழுகிய உலக்கை = வள்ளைப்பாட்டு ஒலிக்கு ஏற்பக் குற்றிக் குற்றிப் பூண் தேய்ந்துபோன உலக்கைகளையும், வயின்தொறு=காணும் இடம் எங்கும். அடைச்சேம்பு எழுந்த ஆடுறுமடாவின் = இலையோடு கூ டி ய சேம்பு போலும் வடிவுடைய சோறுசமைக்கும் பெரும்பானைகளையும். எஃகு உறச் சிவந்த ஊனத்து = ஊன வாள்கொண்டு வெட்டிக் கொந்துவதால் ஊனில் இருந்து ஒழுகும் குருதி படிந்து செந்நிறம் பெற்ற கரிகொந்து கட்டைகளையும். கண்டு = பார்த்து. மதிமருளும் = அறிவு மயங்குதற்குக் காரணமாக, வாடாச் சொன்றி=வற்ருச் சோ ற் று வளம் வாய்ந்த, பேராயாணர்த்து - நீங்காத புது வருவாயினை உடைத்து. நின்வளன். வாழ்க = அத்தகைய உன் பெருவளம் வாழ்வதாக, . - - - - - - ‘. . . . . . . .

68

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/78&oldid=1293709" இலிருந்து மீள்விக்கப்பட்டது