பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5. கான் உணங்கு கடுநெறி

ஒருநாள், புலவர் பாலைக்கெளதமனரோடு அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன், அண்மையில் நிகழ்ந்தபோரில் த ன் படைவீரர் பெற்ற வெற்றிப் பெருமை குறிக்கும் பாட்டொன்றைப் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டான்.

போர் குறித்துப் புறப்பட்டுப் போன நாற்படைப் பெருமையைத் தலை நகரின் தலைவாயிற்கண் இருந்து கன்ணுற்ற புலவர், அப்படையோடு சென்று, அதுபுகுந்த பகைநாட்டு வளத்தையும், அந்நாட்டுப் பேரூர் நலத்தையும் பார்த்து மகிழ்ந்த தம் இருகண்களால், அவை, அப்பெரும் படைகளால் பாழுற்றுப் போன காட்சிகளையும் கன்டவராதலின் வேந்தன் வேட்கையை நிறைவாக்கும் விழுமிய பாட்டை, அப்போதே புனைந்து பாடி, அரசனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினர்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பகைவர் ஏமாந்திருக்கும் இடமும் காலமும் கருதியிருந்து போர் தொடுக்கும் பழிமிகு போர்ப்பண்பு உடையவனல்லன். அதனால், தன் படையெடுப்பு நிகழ்ச்சியைப், பகை முன் கூட்டியே உணர்ந்து கொள்வார்களாக என்ற உள்ளுணர்வோடு, தன் நாற்படை புறப்படுவதன் முன்பே போர் முரசை முழக்கிவிட்டான். இடியொலியோடு மாறுபடும் பேரொலி எழ முரசு, முழங்கி ஒய்ந்ததும் நாற்படை புறப்பட்டுவிட்டது.

ഥலைபோல் உயர்ந்த நெடிய பெரிய தேர்களில் வரிசை வரிசையாகப் பூட்டப் பெற்ற போர்க்குதிரைகள் இறக்கை

69

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/79&oldid=1501619" இலிருந்து மீள்விக்கப்பட்டது