பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தரை

இதிலுள்ள நீரை எல்லாம் நீக்க, அதன் தரை சீரற்று இருப்பது நன்கு தெரியும். அதில் ஆழமான பள்ளத்தாக்குகளும், குடைவுகளும் காணப்படும். மற்றும் மலைத்தொடர்கள், சமவெளி, மலைகள் ஆகியவையும் இதில் உண்டு.

மலைத்தொடர்

இதில் S போன்ற வடிவமுள்ள மலைத்தொடர் வடக்கிலிருந்து தெற்கே 8,000 மைல் வரை பரவி யுள்ளது. இது அட்லாண்டிக் தரையை இரு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பள்ளத்தாக்கும் 500 மைல் அகலம் உள்ளது. கிழக்கிலுள்ள பள்ளத்தாக்கின் ஆழம் 14,000 - 15,000 அடி. மேற்கிலுள்ள பள்ளத்தாக்கின் ஆழம் 13,000 - 16,800 அடி.

சமவெளி

இதில் ஒரு சமவெளி உள்ளது. இதில் தந்திகள் போடப்பட்டுள்ளன. ஆகவே, இச்சமவெளிக்கு தொலை வரைச் சமவெளி (Telegraphic plateau ) என்று பெயர். இது நியூபவுண்ட்லாந்திலிருந்து ஹெப்ரிடிஸ் தீவுகள் வரை விரிந்துள்ளது. தந்திகள் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கின்றன.

குடைவு

1952-இல் அமெரிக்க அறிவியலார் இதன் தரையில் 300 அடி ஆழமும் 800 மைல் நீளமும் உள்ள குடைவு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.