பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

65


இத்தகைய பல்லை இனிது பேணி வருவது நல்லது. மாசு படியாமல் தேசு பெறச் செய்க.

எதையும் கூர்மையாகப் பார்; நீர்மையாகப் பேசு நல்ல குணவதியை மணந்துகொள்: சிறந்த மக்களைப் பெறுக: புனிதமாய் உயர்ந்து வாழுக.

19.

இவ்வுலக வாழ்வுக் கினிய அணி செல்வமே
அவ்வுலக வாழ்வுக் கருளணி;-எவ்வுலகும்
வேண்டி வருமணி வேண்டா விரதமே;
ஈண்டிவை எண்ணல் அணி.

(க.க)
இ-ள்.

இந்த உலக வாழ்வுக்கு இனிய அழகு செல்வமே; அந்த உலக வாழ்வுக்கு உரிய அழகு அருளே;எந்த உலகமும் வேண்டிவரும் அழகு யாதும் வேண்டாமையே; இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதே உணர்வுக்கு நன்மையான அழகு என்க.

நிதியும் கருனையும் நிராசையும் இங்கே சிந்திக்க வந்துள்ளன.சிந்தனை தெளிவது சீவ ஒளியாம்.

உண்ண உணவு, உடுக்க உடை முதலிய பண்டங்களை எல்லாம் எளிதே அடைதற்குப் பொருள் கருவியாயுளது. உடல் வாழ்க்கைக்கு உரிய அவசிய தேவைகளே ஆதரவா அருளி வருதலால் பொருளுடைமையே யாண்டும் இனிய வாழ்வுடைமையாயது.

பொருளுடையான் கண்ணதே போகம்; அறனும்
அருளுடையான் கண்னதே ஆகும்;-அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து. (சிறு பஞ்சமூலம்)

9