பக்கம்:அணியும் மணியும்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 6. உறவும் துறவும் தமிழ் நூல்கள் பல, சமயத்தின் அடிப்படையில் எழுந்துள்ளன. பல புலவர்கள் சமயம் வளரவும் பரவவும் இலக்கியத்தைத் தக்க கருவியாகப் பயன்படுத்தினர். அவ்வாறு சமயத்தின் அடிப்படையில் எழுந்தனவே மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம முதலிய நூல்கள் எனலாம். இலக்கியத்தின் நோக்கம் சிறந்த கொள்கைகளையும் கருத்துக்களையும் உணர்த்தி அவற்றைப் பரப்புவதே என்பர். பொதுவாக உலக இலக்கியங்கள் பலவும் கொள்கைகளைப் பரப்பவே எழுந்தன எனலாம். சமய இலக்கியங்கள் எழுங்காலத்தில், للإ6 (60 وتكي சமயத்தின் அடிப்படையில் எழுந்தாலும், மனித மனத்தின் அடிப்படை இயல்பையும் ஆவல்களையும் உணர்த்திச் சிறந்த கொள்கைகளை நிலைநிறுத்துவதாலேயே அவை என்றும் நின்று நிலவுகின்றன. சாத்தனார் இயற்றிய மணிமேகலை புத்தசமயக் கோட்பாடுகளை உணர்த்த எழுந்ததாயினும் அது மனித இயல்புகளையும், மாந்தர் போற்றத்தக்க சிறந்த பண்புகளையும் உணர்த்துவதால்தான் அது நின்று நிலைத்து விளங்கும் இலக்கியமாக அமைந்தள்ளது. நாட்டிலும் தான் பிறந்த வீட்டிலும் குழப்பமும் அமைதியின்மையும் குழுங்கால் துறவு உள்ளம் வளர்தல் இயல்பு என்பதையும், உறவு அறுத்துத் துறவுவளர்ப்பது எளியது அன்று என்பதையும்; அவ்வாறு துறவுள்ளம் பெற்ற பிறகு அம்மனம் 'யாதும் ஊரே யாவரும்