உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

என்ன பலபேர் தம்பிமார்கள் னுடைய இங்கே வீராவேசமாகப் பேசினார்கள். வீராவேசமாகப் பேசினார்கள் என்று நான் சொல்வது கிண்டலுக்காக, கேலிக்காக சொல்வது அல்ல. அவர்களுடைய உள் உணர்வை நான் அறிவேன். நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த உணர்ச்சிகள் வெளிப்பட்டன, புகைந்து கொண்டே இருந்த எரிமலை ஒரு நாள் பொங்கியதைப் போல. இந்த மாநாட்டிலே பொங்கி வழிந்திருக்கிறார்கள். புரிகிறது எனக்கு. ஆனால், நானும் சென்ற இடமெல்லாம் சந்தித்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம், ஒரு புரட்சிக்கு இந்த நாடு தயாராகட்டும், மக்கள் தயாராகட்டும் என்று சொல்லி வந்திருக்கின்றேன். அது எத்தகைய புரட்சி ? நான் ஜெயப் பிரகாஷ் நாராயண் அல்ல. ஆனால், அவரிடத்திலே பாடம் கற்றுக் கொண்டவன். அவர் நடத்திய முழுப் புரட்சி அமைதி யான புரட்சி, அறவழிப் புரட்சி. சர்க்காரை எதிர்க்கின்ற புரட்சிதான். ஆனால், சாத்வீகமான புரட்சி. அந்தப் புரட்சிக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வந்திருக்கிறேன். இன்றைக்கும் இந்த மாநாட்டிலே அதைத்தான் நினைவூட்ட விரும்புகிறேன். அந்தப் புரட்சியை ஆயுதத்தால் நடத்தப் போகிறோமா, இல்லை. தீவிரவாத முறையா, இல்லை. ஜனநாயக முறையில் செய்ய வேண்டிய புரட்சி அது. மக்களை ஒன்று திரட்ட வேண்டிய புரட்சி. அந்தப் புரட்சி ஜனநாயகப் புரட்சி என்ற காரணத்தால், தேர்தலிலே நாம் பெறுகின்ற வெற்றியின் மூலமாக அந்தப் புரட்சியிலே நாம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியைப் பெற வேண்டுமேயானால், நாம் எதிர்ப்பது யாரை என்பதை ஒருகணம் சிந்தித்து செயல்பட வேண்டுமென்று, நானும்