38
ராமாயணத்தின் மீது எங்களுக்கு உள்ள கருத்து மாறுபாடு காரணமாக அல்ல. அது தேவையில்லாமல் இந்தியத் திருநாட்டில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரு மோதுதலை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடும், ரத்தம் பெருக்கெடுக்கும், அதைத் தடுக்கத் தான் சொல்கிறோம். ராமர் கோவிலை நாங்கள் ஏற்க மாட்டோம். ராமர் கோவில் இந்தியாவிலே கட்டாமல் வேறெங்கே கட்டுவது என்று ஜெயலலிதா கேட்கிறார். ஏன் வேறு நாடா இல்லை ? ராமர் கோவிலை அமெரிக்காவிலே கூடத் தான் கட்டலாம். இங்கிலாந்திலே கூடக் கட்டலாம். ராமர் கோவில் கட்டலாம், முருகன் கோவில் கட்டலாம். பாபர் மசூதி இடித்த இடத்திலே தான் ராமர் கோவிலைக் கட்டுவேன் என்றால் அது வேண்டுமென்றே மூக்கிலே விரலை வைத்து நீ கோழை என்று சொல்லி வம்பு வளர்ப்பார்களே, அதைப் போல பாபர் மசூதி இருந்த இடத்திலே தான் நாங்கள் முஸ்லீம்களின் இதயத்தைப் புண்ணாக்கி அவர்களோடு மோதிக் கொண்டு இந்தியாவை அமளிக் காடாக்கி ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று சொன்னால் அதை தி.மு.க. ஏற்காது, ஏற்காது, ஏற்காது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே போதே அதை இடிக்கலாம், கர சேவை செய்யலாம் என்று சொன்னவர் ஜெயலலிதா. அதை அன்றைக்கே கூடாது என்று சொன்னவர்கள் நாங்கள். நேற்று எனக்கு ஒரு காங்கிரஸ் நண்பர் போன் செய்தார். அப்போது அவர், "நான் காங்கிரஸ்காரன்தான், அய்யர் தான், ஆனால் நான் பூணூல் போடுவதில்லை, நான் சீர்திருத்தக்காரன், ஆனால் ராமர்