பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அணுக்கரு பெளதிகம் லிருந்தே உண்டாகின்றன என்ற பிரெளட்டின் கருதுகோளை யும் இது நினைவூட்டுவதாக உள்ளது. நியூட்ரான் : இனி, 1982-இல் அதுகாறும் முற்றிலும் அறியப்பெருத துகளொன்று கண்டறியப்பெற்றது: அஃது இதனை யொத்த ஒரு முறையைமேற்கொண்டு அணுவின் உட்கருக்களினின்றும் வெளியே தள்ளப்பெற்றது. இந்தக் கண்டுபிடிப்பு ஜோலியட்' குயூரி, சாட்விக்" என்ற மூன்று அறிஞர்களின் அருஞ்செயலா கும் (Achievement):இவர்கள் செருமானிய நாட்டில் போதே! என்பாரால் முதன்முதலில் கண்டறியப்பெற்ற வழியைப் பின் தொடர்ந்து சென்றனர். இந்தத் துகள் புரோட்டானின் பொருண்மையையே பெற்றுள்ளது; அதில் மின்னூட்டமே இல்லை; ஆகவே, அது முகில் அறையில் கண்ணுக்குப் புலனுகக் கூடிய சுவட்டினை உண்டாக்குவதில்லை. அது நியூட்ரான் (Neutron) என்று வழங்கப்பெற்றது. நியூட்ரான் வெளிப் பட்டதைக் கண்ட முதல் அணுக்கரு இயக்கம் பெரிலியம் மாற்றம் அடைந்ததாகும். பெரிலிய அணு க் க ளின் பொருண்மை-எண் 9: அணு-எண் 4: அவை (4Be") ஆல்பாத் துகள்களால் (2He') தாக்கப்பெற்றன: ஏற்பட்ட விளைவுப் பொருள், பொருண்மை-எண் 12-உம் அணு-எண் 8.உம் கொண்ட கார்பன் அணுக்கருவாகும். அடியிற்கண்ட சமன் பாடுகள் சம்பந்தப்பட்ட துகள்களின் பொருண்மைகளையும் மின்னூட்டங்களையும் (பொருண்மை. எண்களையும் அணு எண்களையும்) காட்டுகின்றன : 9 + 4 – 12 = 1; 4 + 2 – 6 = 0. 7. 130prom L-Prout. 8. ஜோலியட்-Joliot. 9. Giggsfi-Curie. 10. &m L-633-Chadwick. 11. Gust(335-Bothe.