பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அணுக்கரு பெளதிகம் நியூட்ரான், எலக்ட்ரான், பாசிட்ரான், நீயூட்ரினே, காமாக் கதிர் ஃபோட்டான்(Gamma-ray photon) என்பவை அத்துகள்க ளாகும். மேலும், ஆல்பாத்துகள்கள் என்பவையும் உள்ளன. ஆல்ை, பொருண்மை.எண்களையும் மின்னூட்ட எண்களையும் நோக்குமிடத்து இறுதியாகக் குறிப்பிட்ட ஆல்பாத்துகள்கள் அடிப்படைத் துகள்கள் அல்ல என்றும், அவை கலவை அமைப்புக்கள் என்றும் நாம் கருத இடமுண்டு. எனினும், அடிப்படைத் துகள்களின் நமது பட்டியல் இன்னும் முற்றுப் பெறவில்லை. முதலாவதாக, அப் பட்டியலில் ஆண்டி நியூட் ரினே (Antineutrino) என்ற துகள் சேர்க்கப்பெறவில்லை: காரணம், பாசிட்ரான் எலக்ட்ரான் எண்ணுக்கு எதிராக இருப்பதுபோல் ஆண்டி நியூட்ரினே ஏன்பது நியூட்ரினேவின் எதிர் எண்ணுக இருக்கின்றது. அது கிட்டத் தட்டப் பொருண்மையின்மையையும் மின்னூட்டமின்மையையும் கொண்டிருக்கும்பொழுது, அஃது ஒரு பண்பில் நியூட்ரிளுேவி னின்றும் வேறுபடுகின்றது; இப்பண்பு எல்லா அடிப்படைத் துகள்களிலும் உள்ளது; அதை நாம் இன்னும் எடுத்துக் கூற வில்லை; அதன் தற்சுழற்கி (Spin) (அல்லது கோணத் திருப்பு திறன்-Angular momentum) ஒரு குறிப்பிட்ட திசையிலுள்ள காந்தத் திருப்புதிறனுக்கு (Magnetic moment) எதிர்த்திசை யில் இருக்கும். பல அடிப்படைத் துகள்கள் தாமாகச் சுழன்று கொண்டிருக்கும் சிறிய பம்பரம்போல் இயங்குகின்றன. ஆனல், அவற்றின் கோணத் திருப்புதிறன்கள் குறிப்பிட்ட திட்டமான மதிப்புக்களைமட்டிலுந்தான் பெற்றிருத்தல் கூடும்; இம் மதிப்புக்களுக்குக் குவாண்டம் பொறிநுட்ப வியலால்தான் (Quantum mechanics) விளக்கம் தர முடியும். நாம் எடுத்துக்கொண்டுள்ள அடிப்படைத் துகள்களைப் பொறுத்தவரையில் பொதுவாக இம்மதிப்பு ht அல்லது h ஆகும்; இந்த t என்பது hl,n என்பதன் சுருக்கக் குறியீடா கும்: h என்பது பிளாங்கின் மாறிலி (Constant). பொதுவாக இந்தத் தற்சுழற்சித் திருப்புதிறனின் விளைவு இதுதான். அந் தத் துகள்கள் ஒரு காந்தத் திருப்புதிறனைக் கொண்டுள்ளன: அஃதாவது, அவை சிறிய காந்தங்கள்போல் இயங்குகின்றன.